Published : 01 Jan 2017 12:25 PM
Last Updated : 01 Jan 2017 12:25 PM

2016 பிஎஸ்இ ஐபிஓ குறியீடு செயல்பாடு ஒரு பார்வை

கடந்த ஆண்டு 26 நிறுவனங்களின் பொதுப்பங்கு வெளியானது. ஆனால் பிஎஸ்இ ஐபிஓ குறியீடு 0.3 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக் கிறது. ஆனால் சென்செக்ஸ் 2 சதவீதம் அளவுக்கு கடந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு 26 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் 26,494 கோடி ரூபாயைத் திரட்டின.

சரிவுக்குக் காரணம்

பல நிறுவனங்களின் ஐபிஓ-வுக்கு முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தாலும் சில ஐபிஓகள் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் ஐபிஒ குறி யீடு பெரிய அளவு உயரவில்லை. குறிப்பாக எல் அண்ட் டி இன்போ டெக், எல் & டி டெக்னாலஜி சர்வீசஸ் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்சியல் லைப் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவன ஐபிஓகள் வெளியீட்டு விலையை விட 4 முதல் 10 சதவீதம் வரை சரிந்து வர்த்தகமாகின்றன.

ஐபிஓ குறியீட்டில் மொத்தம் 28 பங்குகள் உள்ளன. இதில் டாக்டர் லால் பாத்லேப்ஸ் மற்றும் அல்கெம் லேப் ஆகிய இரு பங்குகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஐபிஓ வெளியிட் டன. மீதமுள்ள அனைத்து பங்குகள் 2016-ம் ஆண்டு வெளியிட்டன. பிஎஸ்இ ஐபிஓ குறியீடு கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் 2012, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் மட்டுமே சென்செக்ஸை விட அதிகளவுக்கு ஐபிஓ குறியீடு உயர்ந்திருக்கிறது.

இந்த குறியீட்டில் இருக்கும் எட்டு பங்குகள் பட்டியலிடப்பட்ட விலையை விட சரிந்தும், 20 பங்கு கள் பட்டியலிடப்பட்ட விலையை விட உயர்ந்தும் வர்த்தகமானது. ஆனால் ஆண்டின் இறுதியில் சிறிய நிறுவனப் பங்குகள் விலை சரிந்ததால் ஒட்டுமொத்த ஐபிஓ குறியீடும் சரிந்தது.

தைரோகேர் டெக்னாலஜீஸ், டாக்டர் லால் பாத்லேப்ஸ், நாராயண ஹிருதலயா, அட்வான்ஸ்டு என்ஸைம், இன்பிபீம் மற்றும் க்விஸ் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் ஐபிஓவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிரீமிய விலையிலும் பட்டியலிடப்பட்டன. ஆனால் இந்த விலையில் அந்த பங்குகளால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை என பங்குச்சந்தை வல்லுநர் ஜி.சொக்கலிங்கம் கூறினார்.

எஸ்எம்இ பிரிவில் லாபம்

பிஎஸ்இ ஐபிஒ குறியீடு சென் செக்ஸ் வளர்ச்சியை தாண்ட முடிய வில்லை என்றாலும், பிஎஸ்இ எஸ்எம்இ ஐபிஓ குறியீடு சென் செக்ஸ் குறியீட்டை விட வளர்ச்சி அடைந்திருக்கிறது. 2016-ம் ஆண் டில் பிஎஸ்இ எஸ்எம்இ ஐபிஓ குறி யீடு 33.5% வளர்ச்சி அடைந்திருக் கிறது. 2015-ம் ஆண்டை தவிர தொடர்ந்து அனைத்து ஆண்டுகளி லும் சென்செக்ஸ் வளர்ச்சியை விட பிஎஸ்இ எஸ்எம்இ ஐபிஓ குறியீடு வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.

எஸ்எம்இ பிரிவில் 67 நிறுவனங் கள் 537 கோடி ரூபாயை கடந்த ஆண்டு திரட்டி இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x