

அமெரிக்காவை சேர்ந்த மிகப் பழமையான முதலீட்டு நிறுவனமான பிரெமரிக்கா இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத் தின் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2006-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இதே நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டமும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். செக்யூரிட்டிஸ் ஆய்வாளர்களுக்கான நியூயார்க் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
புரூடென்ஷியல் பைனான்ஷியல் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர். இதே நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
பிரெமரிக்கா அசட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.