Published : 18 Oct 2014 12:45 PM
Last Updated : 18 Oct 2014 12:45 PM

ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 18% உயர்வு

நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 18% உயர்ந்து ரூ.1,611 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ. 1,362 கோடியாக இருக்கிறது.

நிகர வட்டி வருமானம் 20% உயர்ந்து ரூ.3,525 கோடியாக இருக்கிறது. இதர வருமானம் 10% அதிகரித்து 1,948 கோடி ரூபாயாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2,734 கோடியாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது ரூ.3,613 கோடியாக இருக்கிறது.

கடந்த வருடம் இதே காலாண்டில் 0.37 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 0.44 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.02 சதவீதம் உயர்ந்து 401.60 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x