இந்தியா - அமெரிக்காவுக்கு இடையே 5,000 கோடி டாலர் வர்த்தக வாய்ப்புகள்

இந்தியா - அமெரிக்காவுக்கு இடையே 5,000 கோடி டாலர் வர்த்தக வாய்ப்புகள்
Updated on
1 min read

இந்தியா அமெரிக்காவுக்கு இடை யேயான வர்த்தகம் 5000 கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என்று தொழில்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்திய- அமெரிக்க வர்த்தக சபை (ஐஏசிசி) சென்னையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு உரையாற்றினார். மருத் துவம், பாதுகாப்பு, ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் இந்திய அமெரிக்க பொருளாதார வர்த்தக உறவுகள் வளச்சியடைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக 2014-15 காலகட்டத்தில் ரூ.2,15,000 கோடிக்கு ஏற்றுமதி செய்து இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் துறையினரும் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்திய- அமெ ரிக்க வர்த்தக சபையின் தேசிய செயல் குழு உறுப்பினர் டி.என். வெங்கட்நாராயணன் பேசுகையில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் அமெ ரிக்காவின் பங்கு 6 சதவீதமாக உள்ளது. ஏப்ரல் 2000 முதல் மே 2016 வரை 1800 கோடி டாலர்க ளாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

அரசு புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கவும், மருந்து துறை ஆராய்ச்சிகளுக்கும் ஊக்கம் அளித்துவருவதால் அமெரிக்காவுக்கு மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்று இந்திய மருத்து உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜெயசீலன் குறிப்பிட் டார். குறிப்பாக இந்தியா 500 கோடி டாலர் அளவுக்கு பாரம்பரிய மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது என்றும் அமெரிக்காவுக்கு பாரம்பரிய மருத்துகள் ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சைபர் செக்யூரிட்டி துறையில் இந்தியா அமெரிக்காவுக்கு இடையே ஆண்டுக்கு 1200 கோடி டாலர் அளவுக்கு வாய்ப்புகள் உருவாக உள்ளன. தற்போது இந்த துறையில் 400 முதல் 500 கோடி டாலர் அளவுக்கு வாய்ப்பு கள் இருக்கிறது என்று எம்இஎல் நிர்வாக இயக்குநர் என்.ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கு இடையே அரசுக்கும் தொழில்துறைக்குமான உறவு களும், அரசுக்கு அரசுக்குமான உறவும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இருப்பதால் ஏற்றுமதிக்கான வாய்ப்பு கள் மேலும் அதிகரிக்கும் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழில் துறையினர் பலரும் குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in