

$ ஹேவெல்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். இவரது தந்தை குய்மத் ராய் குப்தா மறைவுக்கு பிறகு 2014, நவம்பரில் இந்த பொறுப்புக்கு வந்தார்.
$ 1992ல் நிறுவனத்தின் சந்தை மற்றும் விற்பனை பிரிவில் பணிக்குச் சேர்ந்தவர். பிறகு நிறுவனத் துணைத் தலைவர் பொறுப்புக்கு வந்தார். இவரது கையகப்படுத்துதல் மற்றும் கூட்டுசேரும் உத்திகளால் ஹேவெல்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய லைட்டிங் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
$ தொழில்துறைக்கான மின்சாதனங்கள் உற்பத்தியிலிருந்து நுகர்வோர் சந்தைக்கான உற்பத்திக்கு நிறுவனத்தை கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்தார்.
$ டெல்லி பல்கலைக்கழக ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதார பட்டமும், அமெரிக்காவில் உள்ள வேக் பாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் சந்தை மற்றும் நிதி சார்ந்த எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
$ ராஜஸ்தானில் 666 பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். சிறந்த சுற்றுச்சூழல் பள்ளிகளை உருவாக்குவதற்கான முனைப்பு கொண்டவர்.
$ மருத்துவத்துறையிலும் இவரது குழுமம் ஈடுபட்டுள்ளது.