Published : 29 Jun 2017 15:16 pm

Updated : 29 Jun 2017 16:38 pm

 

Published : 29 Jun 2017 03:16 PM
Last Updated : 29 Jun 2017 04:38 PM

ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரச் சுதந்திரம்: அனில் அம்பானி புகழாரம்

ஜூலை 1-ம் தேதி முதல் அமலாகும் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவின் பொருளாதாரச் சுதந்திரம் என்று அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

பரஸ்பர நிதியம் தொழிற்துறை நிகழ்வு ஒன்றில் மும்பையில் பேசிய அனில் அம்பானி, இதன் மூலம் மனித வரலாற்றில் இந்தியா ஒரு பெரிய ஜனநாயகச் சந்தையாக மாறும் என்றார்.

ஜிஎஸ்டி வரியை வர்ணிக்கும் போது அதன் பயன்களை கணக்கிட எண்ணற்ற வழிகள் உள்ளன. அதன் உண்மையான நம்பிக்கையை வர்ணிக்க ஒரு வழிதான் உள்ளது. ஜிஎஸ்டி என்பது இன்னொரு சீர்த்திருத்தம் அல்ல, நம் பொருளாதார கற்பனையின் விடுதலை, இது நம் பொருளாதாரச் சுதந்திரம்.

ஒரு தேசத்தின் வாழ்வில் வரலாறு உருவாக்கப்படும் கணங்கள் சிறிய பயனுள்ள அடிகளாக இல்லாமல் லட்சியத் தாவல் உடையதாக இருக்கும்.

இந்திய மக்களாகிய நாம் இத்தகைய கணத்திற்கு சாட்சியாக இருக்கிறோம். 70 ஆண்டுகளுக்கு முன்பாக நள்ளிரவில் நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இந்தியாவின் விதி பற்றி உணர்ச்சிகர உரையாற்றினார்.

அதே போல் நாளை நள்ளிரவு நம் பிரதமர் நரேந்திர மோடி இதே மைய மண்டபத்தில் காத்திருக்கும் தேசத்துக்கு உரையாற்றவுள்ளார்.

பூவுலகக் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் தாராளவாத, சுதந்திரச் சந்தை என்பது மனித வரலாற்றில் பொருளாதார நன்மைக்கான பெரிய சக்தியாகும்.

130 கோடி மக்களை ஒன்றிணைக்கும் ஒரு நாடு ஒரு வரி ஒரு சந்தை என்பதை ஜிஎஸ்டி வரி வலியுறுத்துகிறது. உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் இடைவெளியற்ற சரக்கு மற்றும் சேவைகள், திறமைகள், மூலதனம், உழைப்பு மற்றும் கருத்துகளை பரிமாறிக் கொள்ள ஈடுபடுவார்கள்.

இந்தக் கொள்கைக்கு கட்டியங்கூறிய பணமதிப்பு நீக்கம் போல் ஜிஎஸ்டியும் அடிப்படை விதிகளை மாற்றியமைக்கும்.

திவால் சட்டம் முதல் செயலில்லாத வங்கிச் சொத்துகள் விவகாரம் வரை நடப்பு அரசு இந்தியாவின் நிதி உள்கட்டமைப்புகளை பெரிய அளவில் பழுது நீக்கிவருகிறது.

ஆனால் இந்த அரசின் மிகப்பெரிய சாதனை என்னவெனில் அனைவரையும் உள்ளடக்கிய நிதிக் கொள்கை.

இவ்வாறு கூறினார் அனில் அம்பானி.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அனில் அம்பானிஜிஎஸ்டி வரி பொருளாதாரச் சுதந்திரம்இந்தியாநேருமோடிபாஜக அரசுரிலையன்ஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author