ஜிஎஸ்டி சட்டத்தால் தொழில்புரிவது எளிதாகும்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து

ஜிஎஸ்டி சட்டத்தால் தொழில்புரிவது எளிதாகும்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து
Updated on
2 min read

ஜிஎஸ்டி அமல்படுத்தும் பட்சத்தில் தொழில்புரிவது எளிதாகும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை ஜேட்லி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நிதித்துறை இணையமைச்சர்கள் சந்தோஷ் கங்வார், அர்ஜூன்ராம் மேகவால், தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், வருவாய்த் துறைச் செயலாளர் ஹஷ்முக் ஆதியா, பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஜிஎஸ்டி குறித்து ஜேட்லி மேலும் கூறியதாவது:

ஏற்கெனவே உள்ள ஜிஎஸ்டி மசோதா மக்களவையில் நிறைவேறி னாலும், திருத்தப்பட்ட மசோதா மீண்டும் மக்களவைக்கு அனுப்பப் பட்டுள்ளது. அதேபோல 29 மாநில சட்டப் பேரவைக்கும் அனுப்பப் பட்டுள்ளது. சட்டப் பேரவைகளில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடர் நடக்காத மாநிலங்களில் சிறப்பு தொடர் நடத்தலாம். விரைவில் இந்த மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டு வருகிறோம். இன்னும் தேதி முடிவாகவில்லை. தேதி குறிப்பிட்டாலே பாதி வேலைகள் முடிந்ததுபோலதான்.

ஜிஎஸ்டி அமல்படுத்தும் பட்சத் தில் தொழில்புரிவது எளிதாகும். நீண்ட கால அடிப்படையில் வரி விகிதம் குறையும். பல பொருட் களின் விலை குறையும். ஜிஎஸ்டி அமல்படுத்தினால் பணவீக்கம் உயரும் என்ற வாதம் இருக்கிறது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவை அனைத்தும் எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பதை பொறுத்துதான். ஜிஎஸ்டி கவுன்சில் இன்னும் அந்த முடிவை எடுக்கவில்லை.

60-70% சதவீத பொருட்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வரிகள் 27 சதவீதமாகும். செஸ், உள்ளூர் வரி மற்றும் உபரி வரி ஆகியவை சேர்க்கும் போது வரி விகிதம் 30 சதவீதமாக அதிகரிக்கிறது. அதி காரம் அளிக்கப்பட்ட மாநில அமைச் சர்கள் குழு இந்த நிலையில் இருந்து வரி விகிதத்தை குறைக்கும். அதே போல மாநில வளர்ச்சியை பாதிக் காத வகையில் இந்த வரி விகிதம் இருக்கும் என்றார் அருண் ஜேட்லி

18 சதவீத வரி

வரி விகிதம் குறித்து பேசிய அர்விந்த்சுப்ரமணியன், 16.9 முதல் 18.9% பரிந்துரை செய்திருக் கிறோம். முழு எண்களில் அதாவது 17% முதல் 19% என்ற அளவில் வரி விகிதம் இருக்க கூடும். 18 சதவீதம் இருக்க கூடும் என்று நம்புகிறேன் என்றார் அர்விந்த் சுப்ரமணியன். எங்களுடைய கணக்குபடி 18-20% வரை வரி விகிதம் இருந்தால் கூட சராசரி பணவீக்கம் உயர வாய்ப் பில்லை. சில பொருட்களின் விலை உயரலாம், சில பொருட்கள் குறைய லாம். ஆனால் சராசரியில் பாதிப்பு ஏற்படாது. ஜிஎஸ்டியால் பணவீக் கம் உயர்ந்தால் ஆச்சர்யமாகதான் இருக்கும் என்றார்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல்

சரக்கு மற்றும் சேவை வரியை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார். இந்த காலத்துக்குள் நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஏழு சவால்கள் காத்திருக்கின்றன. மத்திய மாநில அரசுக்கான வருவாய் பகிர்வு, மத்திய அரசு கொடுக்க வேண்டிய சலுகைகள், ஜிஎஸ்டி வரி, வரியில் இருந்து விலக்கு உள்ளிட்ட சில சவாலான விஷயங்கள் உள்ளன. டிசம்பர் 2016-க்குள் ஜிஎஸ்டி-க்கு தேவையான தகவல் தொழில்நுட்பம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர நாடு முழுவதும் 60,000 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப் படுள்ளது. அடுத்த 30 நாட்களில் 16 மாநிலங்களின் ஒப்புதல் கிடைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இருக்கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in