

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆப்ரிகாவில் செய்து வரும் ரீடெய்ல் (எண்ணெய்) வியாபார பிரிவில் இருந்து வெளியேறுகிறது. ஆப்பிரிக்க நிறுவனத்தில் உள்ள 76 சதவீத பங்குகளை பிரான்ஸை சேர்ந்த டோட்டல் நிறுவனத்திடம் விற்றது. ஆனால் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இன்னும் சில மாதங்களில் இணைப்பு முழுமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த கூட்டு நிறுவனத்தின் ரிலையன்ஸின் 76 சதவீதம் மட்டு மல்லாமல் மீதமுள்ள சிறுமுதலீட் டாளர்களின் பங்குகளையும் டோட்டல் வாங்கி இருக்கிறது.
கல்ப் ஆப்ரிக்கா பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து ரீடெய்ல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது. 2007-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் 76 சதவீத பங்குகளை தன்னுடைய துணை நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் வாங்கியது. இப்போது 108 சில்லரை விற்பனை நிலையங்கள் இந்த நிறுவனத்துக்கு உள்ளன.