

30 வயதுக்குள்ளான சாதனையாளர் கள் பட்டியலை போர்ப்ஸ் பத்தி ரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த 30 பேர் இடம்பிடித்துள்ளனர்.
2017-ம் ஆண்டுக்கான 30 வய துக்குள் சாதனைப் படைத்தவர்கள் பட்டியல் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த சாதனை யாளர்கள் உலகை மாற்றுவதற்கு பங்களிப்பு செய்து வருபவர்கள். ஹெல்த்கேர், உற்பத்தி, விளை யாட்டு, பைனான்ஸ் என சுமார் 20 துறைகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு துறைக்கும் 30 சாதனையாளர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
மொத்தம் 600 பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர். அடுத்த தலை முறை தொழில்முனைவோர்கள், கல்வியாளர்கள் மற்றும் இன்ன பிற தொழிலில் இருக்கக்கூடியவர் களுக்காக இந்த சாதனையாளர்கள் விதிகளை மாற்றி எழுதக் கூடியவர் கள். மேலும் இவர்கள் மிக அர்ப ணிப்பு உணர்வோடு இருப்பவர்கள் என்று போர்ப்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய வம் சாவளியைச் சேர்ந்த 30 சாதனை யாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
மஞ்சள் காமலை நோய்க்கு வீட்டிலிருந்தே சிகிச்சை செய்யக் கூடிய வகையில் போட்டோதெரபி கருவியை உருவாக்கிய நியோலைட் நிறுவனத்தின் இணை நிறுவனர் விவேக் கோபார்த்தி இந்தப்பட்டிய லில் இடம்பிடித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
இந்திய வம்சாவளியான பிரார்த் தனா தேசாய் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஹெல்த்கேர் நிறுவனமான ஷிப்லைன் நிறுவனத் தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர். இவர் டிரோன்கள் மூலம் மருந்துகளை விநியோகிக்கும் முறைகளைக் கண்டறிந்தவர்.
28 வயதான சாஹன் படேல் போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஹார்வேர்டு மெடிக்கல் பள்ளியில் ஆர்தோபேடில் சர்ஜரி தலைமை மருத்துவராக இருந்து வரும் சாஹன் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை எழுதியவர்.
அவெரியா ஹெல்த் சொல்யூ சன்ஸ் ரோஹன் சூரி, சிந்தனையாளர் வருண் சிவராமன் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
உற்பத்தி மற்றும் தொழில்நிறு வனங்கள் பிரிவில் நேஹா குப்தா வும், சமூக தொழில்முனைவோர்கள் பிரிவில் ஆதித்யா அகர்வாலாவும், விளையாட்டுப் பிரிவில் அக்ஷய் கண்ணாவும் இடம்பிடித்துள்ளனர்.