

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், அந்த நிறுவனத்துக்கு எதிராக சைரஸ் மிஸ்திரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத் திருந்தார். இந்த மனுவை தீர்ப் பாயம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த நிலையில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து மிஸ்திரியை நீக்குவதற்கு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை டாடா சன்ஸ் கூட்டுகிறது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக இன்னும் 3 நாட்களில் தனி மனுவை மிஸ்திரி தாக்கல் செய்யலாம் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் டாடா சன்ஸ் பதில் மனு தாக்கல் செய்யலாம். அனைத்து வழக்குகளும் ஜனவரி 31-ம் தேதி விசாரிக்கப்படும் என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள நிறுவனங் களில் ஏற்படும் பிரச்சினைகளை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் விசாரிக்கிறது.