Published : 25 Mar 2017 10:29 AM
Last Updated : 25 Mar 2017 10:29 AM

ஜெட் ஏர்வேஸை முந்தியது ஸ்பைஸ்ஜெட்

சந்தை மதிப்பு அடிப்படையில் விமான போக்குவரத்து துறையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறு வனம். நேற்றைய வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 0.86% உயர்ந்து 94.20 ரூபாயில் முடிவடைந் தது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,646 கோடி.

நேற்றைய வர்த்தகத்தின் முடி வில் ஜெட் ஏர்வேஸ் பங்கு 2.34% உயர்ந்து 492 ரூபாயில் முடிவடைந் தது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,594 கோடியாகும். ஆனால் நாட்டின் முதல் இடத்தில் இருக்கும் இண்டிகோ நிறுவனத் துக்கும் இந்த நிறுவனத்துக்கும் இடையேயான வித்தியாசம் மிக அதிகமாகும். நேற்றைய வர்த்தகத் தின் முடிவில் இண்டிகோவின் சந்தை மதிப்பு ரூ.37,203 கோடி.

நடப்பாண்டில் ஸ்பைஸ்ஜெட் சந்தை மதிப்பு 63 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் ஜெட் ஏர்வேஸ் சந்தை மதிப்பு 38 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x