இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் ஓய்வூதிய திட்டத்தில் சேர விரைவில் அனுமதி

இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் ஓய்வூதிய திட்டத்தில் சேர விரைவில் அனுமதி
Updated on
1 min read

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் ஓய்வூ திய திட்டத்தில் சேர விரைவில் அனுமதி அளிக்கப்பட உள்ளது. தொழிலாளர்களின் ஓய்வு காலத் துக்கு பிறகு மேம்படுத்தப்பட்ட பலன்களை கிடைக்கச் செய்யும் வகையிலான ‘இபிஎஃப் 95’ என்கிற ஓய்வூதிய திட்டத்தில் பங்க ளிப்பு செலுத்த அனுமதி அளிக் கும் பரிந்துரைகளை அளிக்கும் பணிகளில் இபிஎஃப்ஓ ஈடு பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தானாக முன்வந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். ஓய்வு காலத்துக்கு பிறகு மேம் படுத்தப்பட்ட பலன்களை கிடைக் கச் செய்யும் வகையிலான இந்த ‘இபிஎஃப் 95’ திட்டத்தில் தொழி லாளர்கள் முதலீடு செய்ய அனுமதி அளிப்பதற்கான முன்வரைவு குறித்த வேலைகளில் உள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் ஆணையர் வி.பி.ஜாய் பிடிஐ செய்தி நிறு வனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பங்களிப்பை தொழிலாளிதான் செலுத்த வேண்டும் என்றார். தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995 ன் படி - தற்போது வருங்கால வைப்பு நிதி தொகை அடிப்படை சம்பளத்திலிருந்து 8.33 சதவீதம் பணிபுரியும் நிறுவனத்தின் பங் களிப்பாக செலுத்தப்பட்டு வருகிறது.

அடிப்படை சம்பளம் ரூ.15,000 ஆயிரமாக இருக்கும்பட்சத்தில் இபிஎஃப் பங்களிப்பு அதிகபட்ச மாக 1,424 ரூபாய் இபிஎப் கணக்கில் சேர்க்கப்படும். மேலும் தொழிலாளியின் அடிப்படை கூலி யிலிருந்து அரசின் 1.16 சதவீத அரசின் மானியமும் தொழிலாளி யின் இந்த கணக்கில் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் தொகையை செலுத்தும் திறனுள்ள அதிக சந்தா தாரர்களை இணைக்க ஆலோ சனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தொழில் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் அதிக அளவு பங்களிப்பு செலுத்த அனுமதிப்பதற்கான முன்வரைவு வேலைகளிலும் இபிஎஃப்ஒ ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வுகால பலன்கள் அதிகம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in