

குறிப்பிட்ட காலத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டை ஒப்படைக்கவில்லை என்றால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக் கும் ரூ.5,000 இழப்பீடாகக் கொடுக்க வேண்டும் என டிஎல்எப் நிறுவனத் துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஎல்எப் நிறுவனத்தின் பஞ்ச் குலா கட்டுமான திட்டத்தில் வீடு வாங்க முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வீடு ஒப்படைக்க தாமதமானதையடுத்து அவர்கள் 50 பேர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். இது தொடர்பாக விசாரித்த நீதிமன்றம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் வீடு களைக் கட்டிமுடித்து வாடிக்கை யாளர்களுக்கு அளிக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு மேல் வீடுகளை ஒப்படைக்க தாம தமானால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5000 அபராதமாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இது வழக்கை தேசிய நுகர் வோர் சர்ச்சைகள் தீர்ப்பாய ஆணைக்குழு (NCDRC) விசாரித் தது. நீதிபதி ஜே.கே மாலிக் மற்றும் குழு உறுப்பினர் எஸ்.எம். கனித்கர் உள்ளடக்கிய விசார ணைக்குழு, டிஎல்எப் நிறுவனத் தில் வீடுகளை வாங்க பணம் கொடுத்தவர்களுக்கு, பணம் கட்டிய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு 12 சதவீத ஆண்டு வட்டியைக் கணக்கிட்டு அளிக்க வேண்டும் என்றும் கால தாமதம் காரணமாக வாடிக்கை யாளர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுகளுக்காக ரூ.30,000 இழப் பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய டிஎல்எப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், நீதிமன்றத்தின் உத்த ரவு இன்னும் எங்களுக்கு கிடைக்க வில்லை. இந்த உத்தரவை வழக் கறிஞர்களுடன் ஆலோசித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று குறிப் பிட்டுள்ளார்.
டிஎல்எப்-இன் இந்த திட்டத்தில் 1,153 வீடுகளுக்காக வாடிக் கையாளர்கள் முன்பதிவு செய் திருந்தனர். இந்த திட்டம் 2010ல் தொடங்கப்பட்டது. வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வாடிக்கையாளர் களுக்கு 2012ல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கில் இரண்டு முறை காலக்கெடு நீடிக் கப்பட்டதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். 2014 ஜூன் மற்றும் 2016 செப்டம்பர் என காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீடுகளை முன்பதிவு செய்திருந்தவர்கள் தேசிய நுகர்வோர் ஆணைக் குழுவில் வழக்கு தொடுத்தனர். இதற்கு எதிராக காலக்கெடு நீட்டித் துக் கேட்டு வாதிட்ட டிஎல்எப் நிறுவனம் இதில் பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது எனவே இவர்களைக் நுகர்வோராகக் கருத முடியாது என வாதிட்டது. ஆனால் வீடுகளை முன்பதிவு செய்த பலரும் தாங்கள் உடனடியாக வீடுகளுக்கு மாறத் தயாராக இருப்பதாக விசாரணை ஆணையத்தில் நிரூபித்தனர்.
கட்டுமான பணிகள் தாமதம் காரணமாக டிஎல்எப் நிறுவனத்தின் இந்த திட்டத்துக்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்தது. இதை சுட்டிக்காட்டிய டிஎல்எப், இந்த தாமதத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று வாதிட்டது.
எனினும் இந்த தடை ஆணை ஏப்ரல் 2013 வரை தான் என்பதைக் குறிப்பிட்ட தேசிய நுகர் வோர் சர்ச்சைகள் விசாரணை ஆணைக்குழு டிஎல்எப் நிறுவனத் துக்கு இந்த திட்டத்தை முடிக்க 12 மாத கால அவகாசம் கிடைத் துள்ளதையும் சுட்டிக் காட்டியது.