ஏஜெண்ட் கமிஷனை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்யலாம்: விரைவில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்

ஏஜெண்ட் கமிஷனை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்யலாம்: விரைவில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும்
Updated on
1 min read

ஏஜென்ட்களுக்கு வழங்கப்படும் கமிஷனை இன்ஷூரன்ஸ் நிறுவ னங்களே முடிவு செய்யலாம் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் புதிய இன்ஷூரன்ஸ் மசோதாவில் இருப்பதாக தெரிகிறது.

இதற்கான இன்ஷூரன்ஸ் திருத்த மசோதாவுக்கான நாடா ளுமன்ற குழுவை இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் விஜயன் இன்று சந்திக்கவிருப்பதாக தெரிகிறது. இதற்கான மசோதா வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

தற்போது ஏஜென்ட்களுக்கு பயிற்சி அளிப்பது, தேர்வு நடத்தி அவர்களுக்கு உரிமம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை இன்ஷூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் (ஐஆர்டிஏ) செய் கிறது. இந்த பொறுப்பை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு மாற்ற மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தெரி கிறது.

மேலும் இன்ஷூரன்ஸ் நிறுவ னங்கள் ஏஜென்ட்களுக்கு முதல் வருட பிரீமியத்தில் 40 சதவீதத்துக்கு மேல் கமிஷன் கொடுக்கக்கூடாது என்னும் விதிமுறையை தளர்த்தி ஏஜென்ட் கமிஷனை இன்ஷூ ரன்ஸ் நிறுவனமே முடிவு செய்துக் கொள்ள வசதியாக விதிகள் தளர்த்தப்பட்டிருப்பதாக தெரி கிறது.

இந்த விதியை தளர்த்துவதன் மூலம் இன்ஷூரன்ஸை அதிக மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்போது இந்தியாவில் இன்ஷூ ரன்ஸ் வைத்திருப் பவர்கள் 3.2 சதவீத அளவில் இருக்கி றார்கள்.

செப்டம்பர் காலாண்டில் 21.5 லட்சம் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு 26 லட்சம் ஏஜென்ட்கள் இருந்தார்கள்.

2010-ம் ஆண்டு யூலிப் திட்டங்களுக்கு செபி தடை விதிக்கப்பட்டதிலிருந்தே இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏஜென்ட்களுக்கு வழங்கப்படும் கமிஷனை உயர்த்திக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

இன்ஷூரன்ஸ் நிறுவனங் களின் 90 சதவீத வருமானம் ஏஜென்ட்கள் மூலமா கத்தான் வருகிறது. ஆனால் அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கமிஷன் போதுமானதாக இல்லை என்று ஆயுள் காப்பீட்டு கவுன்சில் செயலாளர் வி.மாணிக்கம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in