பணக்காரர்கள் விரும்பும் ஹோட்டல் பட்டியலில் நியூயார்க்கின் ‘தி பிளாசா’ முதலிடம்

பணக்காரர்கள் விரும்பும் ஹோட்டல் பட்டியலில் நியூயார்க்கின் ‘தி பிளாசா’ முதலிடம்
Updated on
1 min read

சர்வதேச அளவில் பணக்காரர்கள் விரும்பும் ஹோட்டல்கள் பட்டியலில் நியூயார்க்கில் உள்ள சஹாரா குழுமத்திற்குச் சொந்தமான `தி பிளாசா’ முதலிடத்தை பிடித்துள்ளது.

நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வின்படி உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் தங்க விரும்புவதற்குரிய ஹோட்டல் பட்டியலில் `தி பிளாசா’ முதலிடத்தை பிடித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள `செயிண்ட் ரெஹிஸ் ரெசிடன்ஸ்’ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சஹாரா குழுமத்திற்கு லண்டனில் கிராஸ்வெனார் ஹவுஸ், நியூயார்க்கில் `தி பிளாசா’, `ட்ரீம் நியூயார்க்’ என மூன்று ஹோட்டல்கள் உள்ளன. இந்த மூன்று ஹோட்டல்களிலும் மேலும் முதலீடு செய்ய சஹாரா குழுமம் முயற்சித்து வருகிறது.

லண்டனில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ரெசிடன்ஸ் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. செஷல்ஸ் தீவில் உள்ள `போ சீசன்ஸ் பிரைவேட் ரெசிடன்ஸ்’ நான்காவது இடத்திலும் `ஓடோன் டவர் ரெசிடன்ஸ்’ ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

நியூ வேர்ல்டு வெல்த் ஒவ்வொரு வருடமும் அதிக சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களிடம் அவர்களின் விருப்பங்களை பற்றி கேட்டறியும். பணக்காரர்கள் பல்வேறு வசதிகளை முன்வைத்து ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அறைகளின் சுத்தம், சேவை, நீச்சல் குளம், பொழுதுபோக்கு அம்சங்கள், உணவு விடுதி, பாதுகாப்பு ஆகிய பல்வேறு காரணங்களை வைத்து ஹோட்டலுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in