

உயர்மதிப்புள்ள ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகளை வெளியிடும் திட்டமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் ரிசர்வ் வங்கியுடன் விவாதிக்கப்பட்டது. ஆனால் இத்தகைய உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வெளியிடும் திட்டமில்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேகவால் மக்களவைக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்தார்.
1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விடும் திட்டமில்லை என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.