

இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பொருளாதார அறிஞர். நிதி ஆயோக் குழுவில் முழு நேர உறுப்பினராக உள்ளார். 2015-ம் ஆண்டிலிடிருந்து இந்த பொறுப்பை வகிக்கிறார்.
கொல்கொத்தா பிரசிடென்சி கல்லூரியில் இளநிலை பட்டமும், டெல்லி பொருளாதாரப் பள்ளி, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வியும் முடித்தவர்.
கொல்கொத்தா பிரசிடென்சி கல்லூரி, புனேவில் உள்ள கோகலே கல்வி நிறுவனம், புதுடெல்லி சர்வதேச வர்த்தகக் கல்வி நிறுவனம் உள்ளிட்டவற்றில் பணியாற்றியுள்ளார்.
1994-95 ஆண்டுகளில் பொருளாதார விவகாரத்துறையில் ஆலோசகராக இருந்துள்ளார்.
நடைமுறை பொருளாதர ஆராய்ச்சி தேசிய குழு, மத்திய கொள்கை ஆய்வு நிறுவனம் உள்ளிட்டவற்றில் இருந்தவர். ராஜீவ் காந்தி சமகால ஆய்வுகள் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியவர்.
இவரது பணிகளுக்காக 2015-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி அரசு கவுரவித்தது.
பொருளாதாரம் குறித்து பல நூல்களும், பல ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.