Last Updated : 15 Jun, 2017 05:03 PM

 

Published : 15 Jun 2017 05:03 PM
Last Updated : 15 Jun 2017 05:03 PM

புதிய ஜிஎஸ்டி வரியால் சேவைத் துறை நிறுவனஙளுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்கள்: நிபுணர்கள் கருத்து

புதிய ஜிஎஸ்டி வரித்திட்டம் அமலாக இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் நாட்டின் சேவைத்துறை நிறுவனங்கள் புதிய சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.

முக்கிய விவகாரம் என்னவெனில் ஜிஎஸ்டி நெட்வொர்க் இன்னமும் புதிய பதிவுகளுக்கான பணியைத் தொடங்கவேயில்லை என்பதே. ஜிஎஸ்டி நெட்வொர்க் இணையதளம் ஏப்ரலில் ஒரு மாதம் இயங்கியது, ஜூனில் 15 நாட்கள் இயங்கியது, ஆனால் இதுவரை தற்போதைய வரித்திட்டத்திலிருந்து புதிய ஜிஎஸ்டிக்கு மாறும் கோரிக்கைகளை மட்டுமே ஏற்று வருகிறது.

பதிவு எண்:

நடப்பு வரி முறைகளின் படி இந்தியாவில் பல மாநிலங்களில் அலுவலகங்களை வைத்திருக்கும் சேவைத்துறை நிறுவனங்கள் ஒரேயொரு பதிவு எண் வைத்திருந்தால் போதுமானது. ஆனால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய ஜிஎஸ்டி வரித்திட்டத்தின் படி தங்களது வர்த்தக நடவடிக்கை உள்ள மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு எண் பெற வேண்டியது அவசியமாகிறது.

இந்த இக்கட்டு குறித்து பிஎம்ஆர் & அசோசியேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மகேஷ் ஜெய்சிங் கூறும்போது, “அனைத்து சேவைத்துறை நிறுவனங்களும் மீண்டும் பதிவு எண் பெற வேண்டிய சிக்கலான நடைமுறையை மீண்டும் ஒருமுறை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதாவது கிளை நிறுவனங்களை பல்வேறு மாநிலங்களில் வைத்திருக்கும் சேவை நிறுவனங்கள் மீண்டும் பதிவு எண் பெற வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

தற்போது ஜிஎஸ்டி நெட்வொர்க் புதிய பதிவுகளை ஏற்பதில்லை. தற்போது பழைய வரிமுறையிலிருந்து ஜிஎஸ்டிக்கு மாறுவதற்கான நடமுறைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.

எனவே தொழில்நுட்பம், விளம்பரம், ஆலோசனை, லாஜிஸ்டிக்ஸ், உள்ளிட்ட சேவைத்துறை நிறுவனங்கள் மாநில அளவு ஜிஎஸ்டி அடையாள எண்ணைப் பெற வேண்டிய நிலையில் உள்ளது. இன்னும் 2 வாரங்களே உள்ளன” என்று விளக்கினார்.

இதனையடுத்து இத்தகைய பதிவு எண்-ஐ பெற நெருக்கடி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வரிநிபுணர் ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழிடம் கூறும்போது, “இப்போதைக்கு வாட் மற்றும் சேவை வரி உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே வாட் வரி நிறுவனங்கள் புதிய ஜிஎஸ்டிக்கு மாறும் நடைமுறை நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது” என்றார்.

பல மாநிலங்களில் இயங்கி வரும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களுக்கான பதிவு எண்ணைப் பெற வேண்டியுள்ளது.

ஆனாலும் சில நிபுணர்கள் கூறும்போது, சேவைத்துறை நிறுவனங்கள் மாநிலங்களுக்கு புதிய பதிவு எண்களைப் பெறுவது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தாது என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x