Last Updated : 05 Sep, 2016 12:21 PM

 

Published : 05 Sep 2016 12:21 PM
Last Updated : 05 Sep 2016 12:21 PM

சொத்து சமநிலை அற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம்

சொத்து சமநிலை அற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோடீஸ்வரர்களும் அல்லது 10 லட்சம் டாலருக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களுமே பாதிக்கும் மேலான சொத்துக்களைக் கையாளுகிறார்கள். இதனால் சொத்து சமமற்ற தன்மை இந்தியாவில் நிலவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சொத்து சமநிலை அற்ற நாடுகள் பட்டியல் பற்றி நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த பட்டியலில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கிட்டத்தட்ட நாட்டில் உள்ள 54% சொத்துக்கள் கோடீஸ்வரர்கள் கையிலேயே உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனிநபர்களின் மொத்த சொத்துக்கள் அடிப்படையில் 10 பணக் கார நாடுகள் பட்டியலில் இடம்பிடித் துள்ளது. இந்தியாவில் உள்ள தனி நபர்களின் மொத்த சொத்துமதிப்பு 56,00,000 கோடி டாலர். ஆனால் சராசரி இந்தியர்கள் ஏழையாகவே இருக்கின்றனர்.

சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ள ரஷ்யாவில் 62% சொத்துக் களைக் கோடீஸ்வரர்கள் வைத் துள்ளனர். இந்த ஆய்வு சர்வ தேச அளவில் சமத்துவமின்மை நிலையை பற்றி அறிந்து கொள் வதற்காக நடத்தப்பட்டுள்ளது. கோடீஸ்வரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்கள் மற்றும் அதிக சொத்துக்களைக் கொண்ட தனிநபர்கள் ஆகியவற்றை வைத்து இந்த ஆய்வை நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் நடத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x