‘மாற்றத்துக்கு மனித வளத் துறை தயாராக வேண்டும்’

‘மாற்றத்துக்கு மனித வளத் துறை தயாராக வேண்டும்’
Updated on
2 min read

மனித வளத் துறை நவீன மாற்றங்களுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வளர்ச்சியடைய வேண்டும் என்று புதுச்சேரியில் நடந்த மனித வளத் துறை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை புதுவையில் இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் (ஐஎஸ்டிடி) நடத்திய 2-வது மனிதவள மாநாட்டில் மனித வளத் துறையின் அவசியம் மற்றும் அதற்கான தேவை குறித்து பல்வேறு நிறுவனங்களின் மனித வளத் துறைத் தலைவர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

மனித வளத்துறையில் சவால்களும் வாய்ப்புகளும், மனித வளத் துறை என்ன செய்ய வேண்டும். மாற் றங்களை கையாளுவதில் மனித வளத் துறையிடம் தெரிவது தேர்ச் சியா?, தளர்ச்சியா? என்னும் தலைப் பில் பட்டிமன்றம், `தமிழ் சூழலில் மனித வள ஆற்றல் மேம்பாடு’ உள் ளிட்ட சில அமர்வுகள் நடைபெற்றன.

இவ்விழாவில் லைப்செல் நிறுவனத்தின் உமாபதி பேசியது:

இன்று பலவகையான தியரிகளை நாம் படிக்கிறோம். இந்த தியரி சரியாக வேலைசெய்யவில்லை. மனிதவளத்துறையை இன்னும் கூட நாம் சரியாகக் கையாண்டிருக் கலாம். ஆனால் இந்த கொள்கைகள் ஏதும் இல்லாத சமயத்தில் 1000 வருடங்களுக்கு முன்பு மனிதவளத்தை சரியாக கையாண்டு தஞ்சை கோயில் கட்டப்பட்டது. 27 பணியாளர்களுக்கு ஒரு மேலாளர் என்னும் ரீதீயில் 98,000 பணியாளர்களை வைத்து இந்த கோயில் கட்டப்பட்டது.

இப்போது இந்த துறையில் நாம் பல சவால்களை சந்திக்கிறோம். இந்த சவால்களுக்கு தீர்வுகள் இல்லை. பேக் டு பேசிஸ் என்பது போல நம் தமிழ் வரலாற்றை கொஞ் சம் திரும்பி பார்த்தால் இவை அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது என்றார்.

மாற்றம் பவுன்டேஷன் சுஜித்குமார்:

தற்போது இந்தியர்களின் சராசரி வயது மிக குறைவு என்று பெருமையாக இருக்கிறோம். ஆனால் இது ஒரு நேரம் நிர்ணயிக்கப்பட்ட வெடிகுண்டு. இவ்வளவு பெரிய மனிதவளத்தை நாம் சரியாகக் கையாளவில்லை என்றால் பெரும் சிக்கல்கள் உருவாகும். என்னுடைய நிறுவனத்தில் வழங்கப்படும் முக்கியமான விருது 2 வருட பணி அனுபவம் இருக்கும் ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, நான் விமானத்தின் பாதுகாப்பு குறித்த கோடிங் எழுதினேன். இனி விமானங் கள் பத்திரமாக இருக்கும் என்று சொன்னார். அந்த விருது குறித்து அவருக்கு கவலை இல்லை. செய் யும் வேலை மீது மதிப்பு இருந்தது. அந்த மதிப்பை மனிதவளத் துறையினர் உருவாக்க வேண்டும்.

நிதி மேலாளராக இருக்க நிதி படித்திருக்க வேண்டும். அது போல ஒவ்வொரு துறையினருக்கு ஒவ் வொரு படிப்பு இருக்கிறது. மனித வளப் பிரிவுக்கும் படிப்பு இருந் தாலும் யார் வேண்டுமானாலும் ஹெச்.ஆர் ஆகும் சூழ்நிலை இருக்கிறது. ஒரு நிறுவனத் தில் இருந்து மனிதவளத் துறை பணியாளர் வெளியேறும் பட்சத் தில் நிறுவனத்தில் ஒரு சிறிய சலசலப்பு ஏற்படுமே தவிர வேறு எதுவும் இருக்காது.

ஒவ்வொரு துறைக்கும் ஒரு ரோல் மாடல் இருக்கிறார்கள். ஆனால் ஹெச்ஆர் துறைக்கு ரோல் மாடல் இருக்கிறார்களா? இந்த துறையில் ரோல் மாடல்களை உருவாக்குவது அவசியம். இந்த மாற்றத்துக்கு மனிதவளத்துறை தயராக வேண்டும் என்றார்.

போர்டு நிறுவனத்தின் முன்னாள் மனிதவளப் பிரிவு தலைவர் ஆண்டோ வின்சென்ட்:

மனிதவளத் துறையினர் என்பவர் மாற்றத்துக் கான ஏஜெண்ட். ஒரு நிறுவனத்தின் போக்கினை மாற்றும் திறன் மனிதவளத்துறையிடம் இருக் கிறது. மனிதவளத்துறையினர் என்ப வர் உப்பு போல் இருக்க வேண் டும். சாப்பாட்டில் உப்பு இருக்கும் பட்சத்தில் அதை பற்றி நாம் கவலைப் படவில்லை. இல்லை என்னும் பட்சத்தில்தான் அதன் தேவை புரியும். அதுபோல மனிதவளத் துறையினர் இல்லை என்றால் அந்த வெற்றிடம் உணரும் வகையில் பணிபுரிய வேண்டும் என்றார்.

மென்டார் மீடியா நிறுவனத்தின் ஸ்ரீவல்லபன்:

இப்போது மேலாளர்களை விட பணியாளர்களுக்கு அதிக தேவை இருக்கிறது. ஆனால் பணியாளராக யாரும் விரும்புவதில்லை. அதற்கு காரணம் மேலாளருக்கும் பணியாளர்களுக்கும் இடையே இருக்கும் ஊதிய வித்தியாசம் தான். சம்பளங்களில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை குறைக்கும் நடவ டிக்கையில் மனிதவளத்துறையின் பங்கு இருக்கிறது.

மதுரையை சேர்ந்த டாக்டர் ஏ.செல்வராஜ்:

ஒவ்வொரு துறை யிலும் புதுமைகள் உருவாக்கிக் கொண்டே வருகிறார்கள். ஆனால் மனிதவளத்துறை புதுமைகள் குறைவு. அதனை உருவாக்க வேண்டும். ஒரு பணியாளர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவரை நீக்குவது என்பது மிகவும் எளிதான முடிவு. ஆனால் அதனை செய்வதை விட காரணத்தை கண்டுபிடித்து, அதனை களைய மனிதவளத்துறையினர் முயல வேண்டும். ஜப்பானில் ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் உள்ளே செல்லும் போதும், பணிமுடித்து வெளியேறும் போதும் தியானம் முடித்த பிறகே அனுப்புகிறார்கள். இதன் மூலம் அவர்களின் திறன் உயர்கிறது. பணியாளர்களும் நிம்மதியாகவும் இருக்கிறார்கள். இது போல சிறுசிறு புதுமைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்:

ஒவ்வொரு துறை குறித்த பதிவுகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு மெஷினில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் எப்படி சரி செய்வது என்பதற்கான பதிவு இருக்கிறது. அதை படித்து பிரச்சினையத் தீர்க்க முடியும். ஆனால் மனிதவளத்துறையில் உருவான பிரச்சினைகள் எப்படி சரி செய்யப்பட்டன, என்பதற்கு எந்த ஆவணங்களும் இல்லை. மனிதர்களை கையாளும்போது பிரச்சினை ஏற்பட்டால் எதாவது ஒரு பரிசோதனை செய்ய வேண்டும். அந்த சோதனை முயற்சி வெற்றி யிலும் முடியலாம், தோல்வியிலும் முடியலாம். இந்த துறை குறித்து சவால்கள், பிரச்சினைகள், தீர்வு களை ஆவணப்படுத்தும் போது மனிதவளத்துறையை மேலும் சிறப் பாகக் கையாள முடியும் என்றார்.

தொடர்புக்கு: karthikeyan@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in