

இந்தியாவில் 2,36,000 கோடீஸ் வரர்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி டாலர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் 2025-ம் ஆண்டிற்குள் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 5,54,000 ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
நியூ வேர்ல்டு வெல்த் நிறு வனம் `இந்தியா 2016 வெல்த் ரிப்போர்ட்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக் கையின் படி இந்தியாவில் 2007-ம் ஆண்டில் மொத்தம் 1,52,000 கோடீஸ்வரர்கள் இருந்ததாகவும் தற்போது 55 சதவீதம் அதிகரித்து 2015-ம் ஆண்டில் மொத்தம் 2,36,000 கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2007-ம் ஆண்டில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 0.9 லட்சம் கோடி டாலராக இருந்துள்ளது. ஆனால் தற்போது 67 சதவீதம் அதிகரித்து மொத்த கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி டாலராக இருக்கிறது.
2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக் கிறது. நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வெளிப்பணி ஒப்படைப்பு, ஹெல்த்கேர் துறை கள், நிலையான பொருளாதார வளர்ச்சி, தொழில்முனைவோர் களின் எண்ணிக்கை உயர்வு போன்ற காரணங்கள்தான் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர காரணம். மேலும் அடுத்த பத்து வருடங் களுக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயரும். 2025-ம் ஆண்டிற்குள் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 135 சதவீதம் அதிகரித்து 5,54,000 ஆக உயரும்.
இருப்பினும் புதிய தொழில் கள் தொடங்குவதற்கு அரசாங்க விதிமுறைகளும் ஊழலும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு இந்தப் பிரச்சினைகள் கொஞ்சம் களையப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.