

ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி. 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார். குழுமத்தின் செயல் இயக்குநராகவும் உள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.
நிதிச் சேவை, கார்ப்பரேட் கரு வூலம், முதலீட்டாளர் நல்லுறவு, சொத்துகள் மற்றும் சர்வதேச அளவில் வளங்களை திரட்டுவது உள்ளிட்டவற்றில் வல்லுநர்.
வோடபோன் குழுமத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அந்த குழுமத்தின் நிதித்துறை இயக்குநராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தவர்.
வெரிஸான் வயர்லெஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றியவர். இயக்குநர் குழுவிலும் இருந்தார். ஈஸ்ட் மிட்லேண்ட் எலெக்ட்ரிசிட்டி நிறுவனத்தின் நிதி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் குழுமத்தில் தினசரி அலுவல்கள் இல்லாத இயக்குநராகவும், நிதி இயக்குநர்களின் குழுமமான 100 குழுமத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.
நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் தொழில்துறை பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டின் பட்டய கணக்காளராகவும் பயிற்சி பெற்றவர்.