

டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறு வனத்தின் இங்கிலாந்து பிரிவான டிவிஎஸ் ரிகோ சப்ளை செயின் சர்வீசஸ், இங்கிலாந்தை சார்ந்த எஸ்பிசி இண்டர்நேஷ்னல் நிறு வனத்தை கையகப்படுத்தியுள் ளது.
இதுகுறித்து டிவிஎஸ் லாஜிஸ் டிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: எஸ்பிசி இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை டிவிஎஸ் ரிகோ சப்ளை செயின் சர்வீசஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. எஸ்பிசி நிறுவனத்தின் ஆண்டு பரிவர்த்தனை ரூ.165 கோடி.
மேலும் எஸ்பிசி நிறுவனத்தின் கையகப்படுத்துதலுக்கான தொகை மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்யும் தொகை 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறியுள்ளது.
எஸ்பிசி இண்டர்நேஷ்னல் நிறுவனம் இங்கிலாந்து மட்டுமல்லாமல் பிரான்ஸ், ஸ்லோவாக்கியா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கி வருகிறது. 350 ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.