

முன்னணி விமான நிறுவனமான ஏர் ஏசியா இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி. கடந்த மார்ச் ஏப்ரல் மாதம் முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை டிபே ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உத்திகள் வகுக்கும் பிரிவிற்கு துணைத்தலைவராக இருந்தவர்.
2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை இதே நிறுவனத் தின் தொழில் மேம்பாட்டு பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளங் கலை பட்டம் பெற்றவர். பட்டய கணக்காளர் படிப்பை முடித்தவர்.
பியர்ல் குளோபல் நிறுவனத்தின் நிதி பிரிவிற்குத் தலைவராக இருந்தவர்.