

கடந்த இரு வாரங்களில் இந்திய பங்குச்சந்தையில் ரூ.9,700 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு வந்துள்ளது. இதில் பெரும்பாலான தொகை இந்திய கடன் சந்தைக்கு வந்துள்ளது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கடன் சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறிய சூழ்நிலையில் இந்த முதலீடு வந்துள்ளது.
கடந்த ஜூலை 1 முதல் 15 வரையில் இந்திய பங்குச்சந்தையில் ரூ.4,464 கோடி அந்நிய முதலீடும், இந்திய கடன் சந்தையில் ரூ.5,304 கோடி முதலீடும் வந்துள்ளன. மொத்தம் ரூ.9,768 கோடி முதலீடு வந்துள்ளது. இந்த வருடம் இதுவரையில் பங்குச்சந்தையில் ரூ.23,630 கோடி நிகர முதலீடு வந்துள்ளது. மாறாக ரூ.6,265 கோடி முதலீடு கடன் சந்தையில் இருந்து வெளியேறியுள்ளது.
கடந்த வார வர்த்தகத்தில் சந்தை மதிப்பில் முதல் பத்து இடங்களில் உள்ள பங்குகளில் இன்போசிஸ் மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகளின் மதிப்பு சரிந்தது. மற்ற 8 பங்குகளின் மதிப்பு ரூ.57,965 கோடி உயர்ந்துள்ளது.