ஐபோன் 6s, 6s பிளஸ் விலையில் ரூ.22,000-ஐ குறைத்தது ஆப்பிள்

ஐபோன் 6s, 6s பிளஸ் விலையில் ரூ.22,000-ஐ குறைத்தது ஆப்பிள்
Updated on
1 min read

ஐபோன் 6s, 6s பிளஸ் விலைகளை ரூ.22,000 குறைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் ஐபோன் 6எஸ் (128ஜிபி வேரியண்ட்) விலை முன்னதாக ரூ.82,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இது ரூ.60,000-த்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இதே ரூ.22,000 விலைக்குறைப்பில் தற்போது 6எஸ் பிளஸ் (128ஜிபி வேரியண்ட்) ரூ.70,000 என்ற விலையில் கிடைக்கும் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆப்பிள் ஐபோன் இந்த விலைக்குறைப்பை அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

அதே போல் ஆப்பிள் 4 அங்குல ஐபோன் எஸ்.இ. விலையும் குறைந்துள்ளது. 64 ஜிபி மாதிரி போன்கள் தற்போது ரூ.44,000த்திற்கு கிடைப்பதாக சந்தை நிலவரங்கள் கூறுகின்றன. இது முன்னதாக ரூ.49,000 என்ற விலையில் விற்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in