Last Updated : 16 Aug, 2016 10:07 AM

 

Published : 16 Aug 2016 10:07 AM
Last Updated : 16 Aug 2016 10:07 AM

தேசிய ஓய்வூதியத் திட்டம்: ஆண்டு பங்களிப்பு வரம்பு ரூ.1,000 ஆக குறைப்பு

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) மேலும் அதிகமானவர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆண்டு பங்களிப்பு வரம்பு ரூ.1,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) இத்தகவலை வெளியிட்டுள்ளது.

முன்னர் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரம் தொகையை தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் பயனாளிகள் செலுத் தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.

தேசிய ஓய்வூதியத் திட்டம் 2 பிரிவுகளாக உள்ளது. பிரிவு 1-ஐ தேர்வு செய்யும் பயனாளிகள் அந்தக் கணக்கில் இருந்து ஓய்வூதிய காலத்துக்கு முன்பாக பணத்தை எடுக்க இயலாது. பிரிவு 2-ஐ தேர்வு செய்தால் அதில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கும் வசதி உள்ளது.

இதன்படி பிரிவு 1-ல் முதலீடு செய்வோரின் குறைந்தபட்ச வரம்பு ரூ. 6 ஆயிரமாக இருந்தது தற்போது ரூ.1,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

பிரிவு 2-ல் குறைந்தபட்சமாக செலுத்தும் தொகை ரூ.250 ஆக வும், ஒரு நிதி ஆண்டில் இந்தக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.2,000 செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கணக்குகளில் பணம் செலுத்தியவர்களுக்கு ஒரு முறை நிவாரணம் அளிக்கும் வகையில் பிஎப்ஆர்டிஏ அமைப்பு குறைந்த பட்ச தொகையை பராமரிக்காத கணக்குகளை மீண்டும் செயல் படுத்தி பணம் செலுத்த வாய்ப்பு அளித்துள்ளது.

இதனால் குறைந்தபட்ச தொகையை செலுத்தத் தவறிய தால் கணக்குகள் முடங்கிய பயனாளிகள் தங்கள் கணக்கை மீண்டும் தொடரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x