

இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தின் (யுஐடிஏஐ) தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
1984-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி.
2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மஹாராஷ்டிரா மாநில மின்சார பகிர்வு ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். மேலும் அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எம்எஸ் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர்.
எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆய்வு அமைப்பான ஐஇஇஜி-யில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர்.
மஹாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக பணியாற்றியவர்.