

அமெரிக்காவில் நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதில் சிக்கல் எதிரொலியாக ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் நவம்பர் டெலிவரிக்கான விலை 38 சென்டுகள் குறைந்து 101.95 அமெரிக்க டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய் நவம்பர் டெலிவரிக்கான விலை 33 சென்டுகள் குறைந்து 108.04 அமெரிக்க டாலராக இருந்தது.