

சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், தோஷிபா கார்ப்பரேஷன், டென்ஸோ கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளன. இதற்காக ரூ.1,200 கோடி முதலீட்டில் ஆலை அமைக் கவும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஜப்பானைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து புதிய நிறுவனத்தை ஏற்படுத்தி அதிலிருந்து லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிப்பதென முடிவு செய்துள்ளன. இந்த கூட்டு நிறுவனத்தில் சுஸுகி நிறுவனத் துக்கு 50 சதவீத பங்குகளும், தோஷிபா நிறுவனத்துக்கு 40 சத வீத பங்குகளும், டென்ஸோ நிறுவனத்துக்கு 10 சதவீத பங்கும் இருக்கும்.
மத்திய அரசு பிரபலப்படுத்தி வரும் `மேக் இன் இந்தியா’ திட்டத் தின் கீழ் இந்த கூட்டு நிறுவனம் மூலம் பேட்டரிகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேட்டரி வாகனங்களில் பிரதான மானது லித்தியம் அயன் பேட்டரி கள்தான். இவை இறக்குமதி செய்யப்படுவதால் அதிக விலை ஆகிறது. ஆனால் உள்நாட்டி லேயே இது தயாரிக்கப்படும்போது விலை குறையும். இதனால் பேட்டரி வாகனங்களின் உபயோகம் அதிகரிக்கும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிடம் தொழில்நுட்பத்தைப் பெற்று லித் தியம் அயன் பேட்டரி தயாரிக்க தனியார் நிறுவனங்கள் முன்வந் தால் அதை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு இஸ்ரோவுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.