

ஐந்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீடுவதற்கு (ஐபிஓ) மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பாக அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜிஐசி மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கான நடவடிக் கையைத் தொடங்கியுள்ளன.
இந்த இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுவும் ஐபிஓ-வுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கி யுள்ளன. பட்டியலிடுவது முடிவு செய்யப்பட்டாலும் பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே ஐபிஓ வெளியிட முடியும். நடப்பு நிதி ஆண்டில் பட்டியலிடுவதற்காக வாய்ப்பு மிகவும் குறைவு, அடுத்த நிதி ஆண்டில் பட்டியலிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டியல் செய்வதற்கு முன்பாக எவ்வளவு பங்குகளை விலக்கி கொள்வது என்பது குறித்து நிதி அமைச்சகத்தின் அனுமதி பெறப் படும். நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் நியூ இந்தியா அஸ்யூ ரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 514 கோடி ரூபாயாக இருக்கிறது.
இதற்கிடையே, ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுடைய நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்போதுதான் நல்ல சந்தை மதிப்பில் பட்டியலிட முடியும் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ.429 கோடியாகவும், ஓரியண்டல் இன் ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிகர நஷ் டம் ரூ.382 கோடியாகவும் இருக் கிறது. ஒரு வருடத்துக்கு முன்பு இந்த நிறுவனங்கள் முறையே ரூ.356 கோடி மற்றும் ரூ335 கோடி அளவுக்கு லாபம் ஈட்டின.
பொதுத்துறை காப்பீட்டு நிறு வனங்களில் மத்திய அரசின் பங்கு தற்போது 100 சதவீதமாக இருக் கிறது. இதனைப் படிப்படியாக 75 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
பொதுவாக நிறுவனங்கள் பட்டியலிடும் போது அவற்றின் வெளிப்படைத்தன்மை உயரும். மேலும் மத்திய அரசு பங்கு விலக்க லுக்கு நிர்ணயம் செய்யப்பட் டிருக்கும் இலக்கும் எட்டப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு அருண் ஜேட்லி கூறியிருந்தார்.