

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மருந்து ஏற்றுமதித் துறையில் சீனாவைவிட இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
கடந்த ஆண்டில் மருந்தாக்க ஏற்றுமதித் துறையில் இந்தியாவின் வளர்ச்சி 7.55 சதவிகிதமாகவும், சீனாவின் வளர்ச்சி 5.3 சதவிகிதமாகவும் இருந்தது. 2015-ல் இந்தியாவின் மருந்தாக்கத்துறையின் ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 12.54 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
அமெரிக்கா, ஐக்கிய ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகளின் சந்தையிலும் இந்தியா சீனாவைவிட முன்னிலையில் உள்ளது.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய மருந்துகளின் மதிப்பு 3.84 பில்லியன் டாலாரில் இருந்து 4.74 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவின் ஏற்றுமதி 23.4 சதவிதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி 15 சதவிதம் மட்டுமே. ஐக்கிய ஐரோப்பிய நாடுகளிலும், ஆப்பிரிக்கா நாடுகளிலும் இந்தியாவின் மருந்தாக்க துறை ஏற்றுமதி சீனாவைவிட அதிகமாகவே உள்ளது.