Published : 01 Jun 2016 10:44 AM
Last Updated : 01 Jun 2016 10:44 AM

இவரைத் தெரியுமா?- அமித் அகர்வால்

விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2013-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் தொழில் உத்திகள் மற்றும் திட்டமிடுதல் பிரிவிற்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

பட்டய கணக்காளர் பட்டம் பெற்றவர்.

மிட்டல் ஸ்டீல் நிறுவனத்தின் ஜெர்மனி பிரிவிற்கு தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x