Last Updated : 21 Feb, 2017 03:02 PM

 

Published : 21 Feb 2017 03:02 PM
Last Updated : 21 Feb 2017 03:02 PM

170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை கடந்தது ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டு 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் அதன் இலவசத் திட்டங்கள் நிறைவடைவதையடுத்து ஏப்ரல் 1 முதலான கட்டணங்களை ஜியோ திட்டமிடும் என்று கூறிய அம்பானி, “வாடிக்கையாளர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு விநாடியிலும் 7 புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஜியோ பயனாளர்கள் 100கோடி கிகா பைட்கள் தரவுகளைக் கையாண்டு வருகின்றனர். நாளொன்றுக்கு 3.3 கோடி ஜிபிக்கள் தரவுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் மொபைல் தரவுப் பயன்பாட்டில் இந்தியாவை நம்பர் 1 நாடாக்கியுள்ளனர் ஜியோ வாடிக்கையாளர்கள்.

மேலும் ஜியோ நெட்வொர்க்கில் நாளொன்றுக்கு 5.5 கோடி மணிக்கணக்கிலான வீடியோத்தரவுகள் கையாளப்படுகின்றன. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இலவச குரல் அழைப்புகளோடு ஏப்ரல் 1 முதல் ரோமிங்கும் இலவசம். ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை கட்டணமாக ரூ.99 மற்றும் மாதத்தொகை ரூ.303க்கு வரம்பற்ற வாய்ஸ் மற்றும் தரவுகள் வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் வாழ்க்கையில் தரவு என்பதே பிராணவாயு, எனவே நாங்கள் எங்கள் சேவைகளை சிறப்புடன் தொடர்வோம், போட்டியாளர்கள் வழங்கும் தரவுகளை விட 20% அதிகமாகவே ரிலையன்ஸ் ஜியோ வழங்கும். முதல் 10 கோடி ஜியோ வாடிக்கையாளார்கள், ரிலையன்ஸின் இணை நிறுவனர்கள். இவர்களுக்காக மேலும் 12 மாதங்கள் இலவச சேவைகள் வழங்கப்படுகிறது. வரும் மாதங்களில் தரவுத் திறனை ஜியோ இரட்டிப்பாக்கும்.

இவ்வாறு கூறினார் முகேஷ் அம்பானி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x