

அமெரிக்க அரசின் கொள்கைகளால் டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளில் பாதிப்பில்லை என்று அந்த நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மேற்கு நாடுகளில் நிலவும் அதிகபட்ச பாதுகாப்பு வாதங்கள் குறித்து பேசுகையில், இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார். அமெரிக்க உள்ளிட்ட தங்களது மேற்கு நாடுகளின் சந்தையில் விசா தொடர்பான எந்த சிக்கல்களும் இல்லாமல் டிசிஎஸ் நிறுவனம் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது என்றார்.
நிறுவன நடவடிக்கைகளில் எந்த மாற்றங்களும் இல்லை. தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகி றோம். எல்லா நாடுகளுக்கும் புதிய பணியாளர்களை தொடர்ச்சியாக பணியமர்த்தி வருகிறோம் என நிறு வனத்தின் ஆண்டு பொதுக் கூட் டத்தில் பேசுகையில் இதைக் கூறினார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்க விசா விண்ணப்பங்களை டிசிஎஸ் கடுமையாக குறைத்துள்ளது. ஆனால் அதற்கு முன்பு அமெரிக் காவில் 10,000 பணியாளர்கள் வரை டிசிஎஸ் பணியமர்த்தியுள்ளது. மேலும் நிறுவனத்துக்கு அமெரிக் காவிலிருந்து அதிக வருவாய் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் 11,500 பேர் வெளிநாட்டில் பணியமர்த் தப்பட்டுள்ளனர் என்று நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்தார். வளர்ந்து வரும் டிஜிட்டல் டெக்னாலஜி துறைகளில் நிறுவனம் 2 லட்சம் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். 2017-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் டிஜிட்டல் துறை வருவாய் 28 சதவீதம் உயர்ந்து 300 கோடி டாலராக இருக்கும் என்று சந்திரசேகரன் கூறினார்.