

இந்தியாவில் 100 கோடி மக்களை இணைய பயன்பாட்டிற்குள் கொண்டு வர கூகுள் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூகுள் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜன் ஆனந்தன் பேசியதாவது: நாங்கள் மிகச் சிறிய பணியை இந்தியாவில் மேற் கொள்ள போகிறோம். இந்தியா வில் இணையத்தை பயன்படுத்து வோரின் எண்ணிக்கையை 100 கோடியாக உயர்த்துவதே எங்கள் இலக்கு. இந்த இலக்கை அடைவ தற்கு எந்த காலவரையறையும் நிர்ணயம் செய்யவில்லை.
தற்போது இந்தியாவில் இணை யத்தை பயன்படுத்து வோரின் எண் ணிக்கை 35 கோடியாக உள்ளது. ஆனால் 2020-ம் ஆண்டிற்குள் 60 கோடியாக உயரும் என எதிர் பார்க்கிறோம். இணைய பயன் பாட்டை அதிகப்படுத்துவதற்காக ரயில்டெல் உடன் இணைந்து ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி கொண்டு வந்தது உட்பட பல்வேறு திட்டங்களை கூகுள் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இலவச வை பை திட்டம் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 27 ரயில் நிலை யங்களில் மாதந்தோறும் தற் போது 20 லட்சம் பேர் இந்த திட்ட தின் கீழ் பயனடைகின்றனர். மேலும் எளிதாக இணையத்தை பயன்படுத் தும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
3 லட்சம் பெண்களை இணைய பயன்பாட்டிற்குள் கொண்டுவர சிறப்பு திட்டங்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். வேகமான செயல்பாடு, இந்தி மற் றும் ஆங்கிலம் தவிர பல்வேறு மொழிகளில் இணைய வசதிகளை பயன்படுத்துவதற்கும் கூகுள் முயற்சித்து வருகிறது. தொழில் நுட்பம் சார்ந்த தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக கூகுள் கேபிடல் இந்தியாவில் தொடங்கப் பட்டுள்ளது. இவ்வாறு ராஜன் ஆனந்தன் தெரிவித்தார்.