Published : 14 Dec 2013 12:14 PM
Last Updated : 14 Dec 2013 12:14 PM

சர்வதேச பொருளாதார தேக்க நிலை: சீன ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்பு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார தேக்க நிலை காரணமாக சீனாவின் ஆட்டோமொபைல் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தேக்க நிலை முடிவுக்கு வரும் வரை தங்களால் லாபம் சம்பாதிக்க முடியாது என்று பெரும்பாலான சீன ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சிக்கு சர்வதேச அளவில் வரும் பார்வை யாளர்கள், பொருள்களை வாங்கும் நிறுவன பிரதிநிதி களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று டோங்ஷி ஆட்டோ ரேடியேட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த மான்டி லிங் தெரிவித்துள்ளார். 2012-ம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறை உலகின் நான்காவது பெரிய சந்தையாகக் கருதப்பட்டது. ஷாங்காய் வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஆட்டோ மெக்கானிக்கா- கண்காட்சியை ஜெர்மனியைச் சேர்ந்த மெஸே பிராங்பர்ட் நிறுவனமும், சீன தேசிய ஆட்டோமோடிவ் துறை சர்வதேச நிறுவனமும் (சிஎன்ஏஐசிஓ) இணைந்து நடத்தியது.

தொடர்ந்து 10-வது ஆண்டாக நடைபெற்ற இந்தக் கண்காட்சி ஆசிய பிராந்தியத்தில் மிகவும் பிரமாண்டமானதாகும். இக்கண்காட்சியில் 235 நிறுவனங்கள் பங்கேற்று தங்களது தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தன.

ஆனால் இக்கண்காட்சியில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவே பங்கேற்றன. இருப்பினும் ரஷியா, உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்தக் கண்காட்சியில் இந்தியா விலிருந்து குறிப்பாக குஜராத் மாநிலத்திலிருந்து சிறியதும், பெரியதுமான நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்தியாவைப் போலவே சீனாவும் பொருளாதர தேக்க நிலையால் பாதிக்க ப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான மாற்று மதிப்பு குறைந்ததை அடுத்து புதிதாக ஆர்டர் எதையும் அளிக்கவில்லை என்று சீன நிறுவன பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் மொத்தம் 80 ஆயிரம் வர்த்த கர்கள், பார்வையாளர்கள் பங்கேற்ற போதிலும் எதிர்பார்த்த அளவுக்கு வர்த்தகம் நடைபெறவில்லை என்பதை உண்மை நிலை என்று சீன ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x