Published : 17 Aug 2016 11:02 AM
Last Updated : 17 Aug 2016 11:02 AM

ஜியோமியின் ரெட்மி 3 எஸ், 3 எஸ் பிரைம் அறிமுகம்

ஸ்மார்ட் போன் விற்பனையில் முக்கியமான நிறுவனமான ஜியோமி நேற்று சென்னையில் இரு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரெட்மி 3எஸ் மற்றும் ரெட்மி 3எஸ் பிரைம் ஆகிய இருமாடல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ரெட்மி 3எஸ் விலை ரூ6,999, ரெட்மி 3எஸ் பிரைம் விலை ரூ.8,999 ஆகும்.

அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மனு ஜெயின், கடந்த நான்கு காலாண்டுகளில் 10 லட்சம் ஸ்மார்ட்போன்களுக்கு மேல் இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறோம். இதில் 75 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். சிட்டியில் உள்ள பாக்ஸ்கான் ஆலையிலும் பெரும்பாலானவை தயாரிக்கப்படுகின்றன. சில மாடல்கள் இறக்குமதி செய் யப்படுகின்றன. சிட்டியில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜியோமி போன் களில் 90 சதவீதம் ஆன்லைனில் விற்பனையாகின்றன. கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி எட்டு நிமிடங்களில் 90,000 போன்கள் விற்பனையானது. அடுத்து இன்று (மதியம் 12) பிளிப்கார்ட் மற்றும் மி டாட் காம் ஆகிய இரண்டு இணையதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது என்று மனு ஜெயின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x