

இந்த வருடம் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 6000 கோடி டாலரை தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார அறிஞர் நாகேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் முதலீடு செய் வதற்கு ஏதுவான கொள்கைகளும் சூழ்நிலையும் இருப்பதனால் இந்தி யாவில் அந்நிய நேரடி முதலீடு 6000 கோடி டாலருக்கு மேல் வரும் என்று அவர் கூறியுள்ளார்.
யுனெஸ்கேப் (UNESCAP) அமைப்பின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா அலுவலகத்தின் தலைவரும் பொருளாதார அறிஞருமான நாகஷ் குமார் யுஎன்சிடிஏடி என்ற அறிக்கையை வெளியிட்டு பேசுகையில், ``கடந்த 2015-ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு 28 சதவீதம் அதிகரித்து 4420 கோடி டாலராக இருந்தது. இந்த ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 6000 கோடி டாலரை தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க புதிய தாராளமய கொள்கை சார்ந்த நடவடிக்கைகளை தற்போதைய அரசு எடுத்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதில் ஆசிய அளவில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது. உலகளவில் 10வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் ஈக்விட்டி முதலீடு செய்வதில் சிங்கப்பூர், மொரீஷியஸ், அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸ் ஆகிய இரண்டு நாடுகளால் மட் டும் இந்தியாவிற்கு கடந்த வருடம் 60 சதவீத அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.