

மனித வளக் குறியீட்டில் உலக அளவில் இந்தியா பின்தங்கி யுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டிய லில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் நாட் டினுடைய இயற்கை வளம், பொருளாதார வளர்ச்சி சார்ந்த மேம்பாடுகள் மற்றும் திறமை களை பயன்படுத்தும் திறன் சார்ந்த மனித வளக் குறியீட்டில் இந்தியா 105 வது இடத்தில் உள்ளது.
ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கும் உலக பொரு ளாதார அமைப்பின் ஆண்டு கூட்டம் சீனாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள்படி வங்கதேசம் பூடான், இலங்கை போன்ற நாடுகள் மனித வளக் குறியீட்டில் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன. சீனா 71-வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 118-வது இடத் தில் உள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 130 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது. 2015 ஆம் ஆண்டின் புள்ளிவிவ ரங்கள்படி மொத்தம் 124 நாடு கள் பட்டியலில் இந்தியா 100 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத் தக்கது.
என்றாலும் இந்தியாவில் பல் வேறு வயது பிரிவினரிடத்திலும் கல்விக்கான முயற்சிகள் அதி கரித்து வருகிறது. இளைஞர் களின் படிப்பறிவு விகிதம் 90 சத வீதமாக உள்ளது. இதில் உலக அளவில் 103வது இடத்தில் இந் தியா உள்ளது. இதர வளரும் நாடு களை விட கல்வியில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
வறுமை மற்றும் மனித உழைப்பு பங்களிப்பு விகிதத்தி லும் இந்தியா பின் தங்கியுள்ளது. உலக அளவில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பற்ற தலைமுறை இடைவெளியில் இந்தியா 121-வது இடத்தில் உள்ளது. இருந்தாலும் இந்தியா கல்வி தரத்தில் சிறப்பான இடத்தில் உள்ளது. உலக அளவில் கல்வி தரத்தில் 39வது இடத்தில் உள்ளது. ஊழியர் பயிற்சியில் 46-வது இடத்திலும், திறமையான பணியாளர்களை அடையாளம் காண்பதில் 45 வது இடத்தில் உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. பல்வேறு வகையிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மேம்பட்டுக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் பட்டதாரிகளை உருவாக்குவதில் இந்தியா மிகப் பெரிய பங்களிப்பை செலுத்தி வருகிறது என்றும் அந்த புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது. சீனாவுக்கு அடுத்து மிகப்பெரிய அளவில் ஆண்டுக்கு 7.8 கோடி பட்டதாரிகளை உலக அளவில் அளித்துள்ளது. சமீபத்தில் மட்டும் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் மற்றும் பொறியியல் சார்ந்து 25 லட்சம் மாணவர்களை அளித்துள்ளது.
பின்லாந்து, நார்வே, மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகள் இந்த பட்டியலில் முதல் மூன்று இடங் களில் உள்ளன. இந்த நாடுகளில் தங்களது மனித வளத்தில் 85 சதவீதத்தை பயன்படுத்துகின் றன. ஜப்பான் மற்றும் ஸ்வீடன் நாடுகள் 4வது 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளன.