

நேரடி பணப்பரிவர்த்தனை மூல மாக ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பரிமாற்றம் செய்தால் அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வரித்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைய நேரடி பணப் பரிவர்த்தனை செய்தால் பணம் பெற்றுக் கொள்பவருக்கு பரிமாற் றம் செய்யப்பட்ட தொகையே அபராதமாக விதிக்கப்படும் என வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் கறுப்புப் பண பரிமாற்றத்தை பற்றி ஏதேனும் விவரங்கள் தெரிந்தால் ‘blackmoney@incometax.gov.in’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நிதிச் சட்டம் 2017-ன் கீழ் மத்திய அரசு, ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை நேரடி பணபரிவர்த்தனை செய்ய தடை விதித்துள்ளது.
மேலும் வருமான வரிச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 269எஸ்டி பிரிவின் படி ஒரே நாளில் ரூ. 2 லட் சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பணப் பரிவர்த்தனை யாக மேற்கொள்ள தடைவிதிக்கப் பட்டுள்ளது. அதாவது ஒரே பரி வர்த்தனையாகவும் அல்லது ஒரு நிகழ்ச்சியின் பொருட்டு வழங்கப் படுவதற்கும் தடைவிதிக்கப்பட் டுள்ளது. மேலும் இந்த 269எஸ்டி பிரிவின் படி, நேரடி பரிவர்த் தனையில் ஈடுபடுவோரில் பணத் தைப் பெற்றுக் கொள்பவருக்கு பரிமாற்ற தொகையே அபராதமாக விதிக்க முடியும்.
2017-18 நிதியாண்டுக்கான பட் ஜெட்டில், ரூ. 3 லட்சத்துக்கு மேல் நேரடி பணப் பரிவர்த்தனையில் தடை விதிப்பதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி முன்மொழிந்தார். பின்பு நிதி மசோத சட்டத்திருத் தத்தின் படி, ரூ.2 லட்சமாக குறைக் கப்பட்டது. அரசாங்க பரிவர்த்தனை, வங்கி பரிவர்த்தனை, அஞ்சலக பரிவர்த்தனை, கூட்டுறவு பரிவர்த் தனை ஆகியவற்றுக்கு இந்த கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக இந்தக் கட்டுப் பாட்டை மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கறுப்புப் பணத்தை பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிப் பதற்கு ‘blackmoney@incometax.gov.in’ என்ற மின்னஞ்சல் முகவரி வரித்துறையினரால் தொடங்கப் பட்டது.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, கணக்கில் வராத ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை முறைகேடாக புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வந்தனர். இதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் கணக்கில் வராத சொத்துக்களை பற்றி தகவல் தெரிவிக்கும் வகையில் பிரதான் மந்திரி காரிப் கல்யாண் திட்டத்தை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.