Published : 19 Mar 2017 12:05 PM
Last Updated : 19 Mar 2017 12:05 PM

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வரி வசூல்

கடந்த நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக தங்களிடம் இருக்கும் தொகையை மக்கள் வங்கியில் செலுத்த தொடங்கினார்கள். பலர் தங்களிடம் இருந்த கறுப்பு பணத்தையும் வங்கியில் டெபாசிட் செய்ய தொடங்கினார்கள். கணக்குகளில் வராத தொகைக்கு வரி விதிக்க வரி ஆணையம் முடிவு செய்தது. இந்த வரி மட்டும் 6,000 கோடியை தாண்டிவிட்டதாக சிறப்பு புலனாய்வு குழுவின் துணைத் தலைவர் நீதிபதி அர்ஜித் பசாயத் தெரிவித்தார். இந்த தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

முன்பு டெபாசிட் முறைகேடாக செய்யப்பட்ட தொகைக்கு 60 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட் டது. இப்போது அந்த வரியை 75 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக் கிறது. எவ்வளவு தொகை திரட்ட நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்த தகவல் வெளி யிடமுடியாது. ஆனால் கணிசமான தொகை திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக 50 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மெயில் அனுப்பினோம். ஒடிஷாவை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் 2.5 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருக்கிறார். 1,092 நபர்கள் 50 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்திருந்தார்கள். ஒடிஷா போன்ற மாநிலத்தில் இருப்பவர்கள் கூட பதில் அளித்தார்கள். ஆனால் இன்னும் பெரும்பாலானவர்கள் இதற்கு பதில் அளிக்கவில்லை. வருமான வரித்துறைக்கு இன்னும் பெரிய சவால் காத்திருக்கிறது.

பெரிய கணக்குகளை விசாரித்த பிறகு சிறிய கணக்குகளையும் அதிக தொகை டெபாசிட் செய்யப் பட்டதையும் விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப் பட்ட அதிக தொகை குறித்தும் விசாரிக்க முடிவெடுத்திருக் கிறோம். இது கடினமான வேலை மட்டுமல்லாமல் அதிக நேரம் பிடிக்கும் வேலையும் கூட, ஆனால் வரி அதிகாரிகள் இதனை செய்ய தயாராக இருக்கிறார்கள் என்றார்

ரூ.100க்குள் வரி இருந்தால் தள்ளுபடி

100 ரூபாய்க்கு கீழ் வரி செலுத்த வேண்டி இருந்தால் அதனை தள்ளுபடி செய்வதாக மத்திய நிதித்துறை இணைய மைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்களவைக்கு அளித்த எழுத்துபூர் வமான பதிலில் தெரிவித்தார். 21.54 லட்சம் பேர் 100 ரூபாய்க்குள் வரி செலுத்த வேண்டி இருக்கிறது.

இதனை தள்ளுபடி செய்வதன் மூலம் நிர்வாக பணிகள் பெரும் அளவில் குறையும். இதன் மூலம் வசூலாகும் தொகை ரூ.6.4 கோடி மட்டுமே. அதனால் சிறிய அளவினான தொகைக்கு அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம் என இந்த தொகை தள்ளுபடி செய்யப்பட்டது என சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x