2014-15 நிதியாண்டில் ரூ.21,870 கோடி வரியை செலுத்தாத ஒருவர்: வருமான வரித்துறை தகவல்

2014-15 நிதியாண்டில் ரூ.21,870 கோடி வரியை செலுத்தாத ஒருவர்: வருமான வரித்துறை தகவல்
Updated on
1 min read

2014-15 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த வரி வசூலில் 11 சதவீதம் அளவுக்கு ஒரே ஒருவர் வரி செலுத்த வேண்டியுள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. 2014-15-ம் நிதியாண்டில் வரி செலுத்திய மொத்த இந்தியர் களிலும் இவர் ஒருவர் மட்டும் 21,870 கோடி ரூபாய் வரி செலுத்தாமல் உள்ளார்.

2014-15 நிதியாண்டில் ஒட்டு மொத்த வரியுடன் ஒப்பிடும் போது இவர் செலுத்த வேண்டியது மட்டும் 11 சதவீதமாக உள்ளது. வருமான வரித்துறை சமீபத்தில் வெளியிட்ட 2014-15ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களில் இது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் யார் என்கிற விவரம் வெளியிடப்படவில்லை.

மேலும் 3 இந்தியர்கள் தங்களது தொழிலின் மூலம் கிடைத்த வருமானமாக ரூ.500 கோடிக்கும் அதிகமான தொகையை காட்டியுள்ளனர். இரண்டு பேர் 2014-15 ஆண்டு நீண்டகால மூலதன ஆதாயமாக ரூ.500 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளனர்.

இந்தியாவினுடைய சொத்து மதிப்பில் 58 சதவீத சொத்துகள் சுமார் 1 சதவீத பெரும் பணக் காரர்களிடம் உள்ளன. சுமார் 70 சதவீத மக்களிடம் உள்ள சொத்து அளவுக்கு 57 கோடீஸ்வரர்களிடம் உள்ளது. இது தொடர்பான தகவல்களை ஆக்ஸ்பாம் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஒப்பீட்டளவில், 1 சதவீத அமெரிக்கர்கள் 19 சதவீத வருமா னத்தையும், வரி செலுத்துவதில் 38 சதவீதமாகவும் உள்ளனர். அமெரிக்கா இது தொடர்பான தகவல்களை வெளியிடுகிறது. ஆனால் இந்தியாவில் வருமானம் மற்றும் வரி செலுத்துபவர்களின் புள்ளி விவரங்களை அரசு வெளியிடுவதில்லை.

2010 மக்கள் தொகை நிலவரப்படி உலக அளவில் பாதி மக்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு அளவுக்கு 338 பெரும் பணக்காரர்கள் வைத்திருந்தனர். 2015-ம் ஆண்டில் இது 62 நபர்களாக சுருங்கியுள்ளது.

2013-14 நிதியாண்டில் 3.65 கோடி நபர்கள் தங்களது ஆண்டு வருமானமாக 16.5 லட்சம் கோடி காட்டியுள்ளனர். இவர்கள் ரூ.1.91 லட்சம் கோடி வரி செலுத்த வேண்டியுள்ளது.

2014-15 நிதியாண்டில் 3.6 கோடி இந்தியர்கள் தங்களது சம்பள வருமானமாக ரூ.9.8 லட்சம் கோடி காட்டியுள்ளனர். இது 2015-16 நிதியாண்டின் மொத்த தேசிய வருமானத்தின் 7 சதவீதமாகும். இதைத் தொடர்ந்து தொழில் மூலமான வருமானம் 5.6 லட்சம் கோடியும், இதர வகைகள் மூலம் வருமானமாக ரூ.2.4 லட்சம் கோடியையும் காட்டியுள்ளனர்.

2014-15 ஆண்டுக்கான வரி செலுத்த வேண்டிய தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் இதர நிறுவனங்கள் ரூ.4,46,719 கோடி வரி செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 13 சதவீதம் அதிகமாகும்.

2015-16 ஆண்டில் வசூலிக்கப்பட்ட நேரடி வரியில் மஹாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்களின் பங்கு 53 சதவீதமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in