

கடந்த காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 0.1 சதவீதமாக (30 லட்சம் டாலர்) குறைந்திருக்கிறது. டிசம்பர் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.3 சதவீதமாக (710 கோடி டாலர்) இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் (2015-16) நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.1 சதவீதமாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் (2014-15) 1.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு கணக்கு பற்றாக் குறை குறைந்தது போல வர்த்தகப் பற்றாக்குறையும் குறைந்திருக் கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண் டில் 13,000 கோடி டாலராக வர்த்தகப் பற்றாகுறை இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் 14,490 கோடி டாலராக இருந்தது.
தொடர்ந்து 18-வது மாதமாக ஏற்றுமதி சரிந்திருக்கிறது. மே மாத ஏற்றுமதி 0.79 சதவீதம் சரிந்து 2,217 கோடி டாலராக இருக்கிறது.