

முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று சூப்பர்டெக் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று கடுமை யான உத்தரவு பிறப்பித்துள்ளது. நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கிப் போனாலோ அல்லது நிறுவ னத்தை மூடினால் கூட எங்களுக் குக் கவலை இல்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். நீண்ட காலமாக நிலுவையில் நிற்கும் சூப்பர்டெக் நிறுவனத்தின் நொய்டா திட்டத்தில் வீடு வாங்க பணம் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பித் தருவதில் நிறுவனம் காலதாமதம் செய் வதால் உச்ச நீதிமன்றம் இந்த கடுமையான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.
வீடு வாங்க பணம் கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுங்கள்’’ என்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோரடங்கிய அமர்வு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ஏற்கெனவே நிறுவனத்துக்கு அறிவுறுத்திய பிறகும் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை பணத்தை திருப்பி தராமல் இருப்பதை நீதிபதிகள் கடுமையாக சாடினர். உச்ச நீதிமன்றம் இது குறித்து ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக வீடு வாங்க பணம் செலுத்தியவர்களிடம் 2015, ஜனவரி-5ம் தேதியிலிருந்து முதலீடு செய்த தொகைக்கு மாதம் 10 சதவீத வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க மறுத்த நிறுவனம், அந்த பணத்தை தங்களது எமரால்டு டவர்ஸ் திட்டத்தில் வீடு வாங்க வற்புறுத்தியுள்ளது. இதை எதிர்த்து 17 வாடிக்கையாளர்கள் உச்ச நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தனர்.
இது தொடர்பாக உத்தரவிட் டுள்ள நீதிமன்றம், நிறுவனம் பணம் அளித்த விவர பட்டியலை அடுத்த விசாரணை தேதியான அக்டோபர் 25- அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. சூப்பர்டெக் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் வாதாடினார்.
வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்டிய முதலீடுகள் கட்டுமான திட்டத்துக்கு செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் வாதிட்டார். குறிப்பாக 628 நபர்களில் 274 நபர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 74 நபர்கள் மறு முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டனர், 108 நபர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது என்றும் தவன் நீதிபதிகளிடத்தில் எடுத்துரைத்தார்.
இதற்கு நீதிபதிகள் ஏன் சூப்பர்டெக் நிறுவனம் அனைவருக்கும் பணத்தை திருப்பி அளிக்கவில்லை என்று கேட்டனர். இதற்கு தவன் குறிப்பிடும்போது நீதிமன்ற உத்தரவுபடிதான் செயல் பட்டுள்ளோம். விண்ணப்பதாரர் களுக்கு உடனடியாக பணத்தை திருப்பி அளிக்க மட்டுமே நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர் கள் பணத்தை திரும்ப நிறுவனத் திடமே அளித்தனர் என்று குறிப் பிட்டார். இதை எதிர்த்து வாதிட்ட வாடிக்கையாளர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் சூப்பர்டெக் நிறு வனம் உடனடியாக பணத்தை அளிக்கவில்லை என்று தெரி வித்தனர்.