வரைத் தெரியுமா?- திமோத்தி குக் டிராப்பர்

வரைத் தெரியுமா?- திமோத்தி குக் டிராப்பர்
Updated on
1 min read

சர்வதேச நிறுவனமான டிராப்பர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2014-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்தின்படி இவரின் மொத்த சொத்து மதிப்பு 100 கோடி டாலர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் டிராப்பர் பல் கலைக்கழகத்தை நிறுவியவர்.

குரோமா குழுமம், ஸ்கைப் டெக்னாலஜீஸ் நிறுவனங்களில் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர். அமெரிக்காவின் அரசியல் மற்றும் நிர்வாக குழுவில் உறுப்பினராக இருந்தவர்.

உலகின் சிறந்த முதலீட்டாளர்கள் என போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்தவர்.

2014-ம் ஆண்டு வொர்த் பத்திரிகை வெளியிட்ட நிதித்துறையில் அதிகாரமிக்கவர்கள் பட்டியலில் 98-ம் இடத்தை பிடித்தவர்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும், ஹார்வேர்டு பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in