வணிக நூலகம்: தலைமைத்துவ அணுகுமுறைகள்!

வணிக நூலகம்: தலைமைத்துவ அணுகுமுறைகள்!
Updated on
3 min read

நமது ஒவ்வொரு செயல்பாட்டின் முடிவையும் நம்முடைய அணுகு முறைகளே தீர்மானிக்கின்றன. ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை படைத்தவை அணுகுமுறை கள். ஒருவரின் தனிப்பட்ட வெற்றிக்கோ அல்லது ஒரு குழுவின் வெற்றிக்கோ நல்ல அணுகுமுறைகள் மட்டுமே உத்திரவாதமான விஷயம் இல்லை என்றபோதிலும், மோசமான அணுகு முறைகள் கண்டிப்பாக அழிவிற்கான உத்திரவாதம் எனலாம்.

வாழ்க்கையின் வெற்றிக்கான அணுகுமுறைகளின் அத்தியாவசியங் களை நமக்கு சொல்கிறது “ஜான் சி மாக்ஸ்வெல்” அவர்களின் இந்தப் புத்தகம். குடும்பமோ, தொழிலோ, வேலையோ அல்லது மற்றவர்களுட னான உறவுமுறைகளோ எதுவாயினும், அணுகுமுறைகளைப் புறக்கணித்து விட்டு நம்மால் வெற்றியை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது என்கிறார் ஆசிரியர். மேலும், வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றின் மீதான நமது பார்வையை வரையறுப்பதும் நமது அணுகுமுறைகளே என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

திறமை மட்டும் போதுமா?

அதீத திறமை வாய்ந்த தனிநபரின் செயல்பாடோ அல்லது அதீத திறமை களைக் கொண்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினரின் செயல்பாடோ மட்டுமே அவர்களுக்கான வெற்றியைப் பெற்றுத்தருமா?. கண்டிப் பாக இல்லை, வெற்றியை வசப்படுத்த திறமை அவசியம்தான் என்றாலும் அது மட்டுமே போதுமான விஷயம் அல்ல. வணிகம், தொழில்முறை குழுக்கள், கல்வி, அரசாங்கம் மற்றும் வீடு என எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றிலுள்ள திறமைகளையும் தாண்டி, மோசமான அணுகுமுறைகள் வெற்றிப்பாதையை அடைத்துவிடுகின்றன.

மிகவும் திறமையான உறுப்பினர் களைக் கொண்ட ஒரு குழுவில் பல்வேறு வகைப்பட்ட அணுகுமுறைகள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை விவரித்துள்ளார் ஆசிரியர். உயரிய திறமையுடன் மிகவும் மோசமான அணுகுமுறைகள் சேரும்போது கெட்ட குழுவையும், உயரிய திறமையுடன் கெட்ட அணுகுமுறைகள் சேரும்போது சராசரியான குழுவையும், உயரிய திறமையுடன் சராசரியான அணுகு முறைகள் சேரும்போது நல்ல குழுவை யும், உயரிய திறமையுடன் நல்ல அணுகு முறைகள் சேரும்போது சிறந்த குழுவையும் ஏற்படுத்துகின்றன. ஆக முதன்மையான வெற்றியைப் பெற விரும்பினால், சிறந்த திறமையும் அற்புதமான அணுகுமுறைகளையும் கொண்ட உறுப்பினர்கள் தேவை.

ஒட்டிப் பரவக்கூடியவை!

ஒரு குழுவில் உள்ள பல விஷயங்கள் எளிதாக மற்றவர்களிடம் பரவக்கூடியவை அல்ல. உதாரணமாக திறமை, அனுபவம் மற்றும் பயிற்சிக் கான விருப்பம் போன்றவை. ஆனால், அணுகுமுறைகள் தொற்றும் தன்மை யுடையவை மற்றும் மற்றவர்களை கவரக்கூடியவை என்கிறார் ஆசிரியர். குழுவின் மேம்பாட்டிற்கான விரும்பத் தக்க குணநலன்களை கொண்ட ஒருவர் இருக்கும் நிலையில், அக்குழுவி லுள்ள மற்றவர்களும் அதே போன்ற பண்புகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோலவே தனது வலிமையான பணி நெறிமுறை களின் வாயிலாக நேர்மறையான தாக்கங் களை ஏற்படுத்தும் உறுப்பினரை மற்றவர்களும் பின்பற்றத் தொடங்குவர்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் எந்த ரன்னராலும் கடக்க முடியாது என்பதே பல விளை யாட்டு நிபுணர்களின் நம்பிக்கையாக இருந்தது. நீண்ட காலங்கள் அவர்களது நம்பிக்கை சரியானதாகவே இருந்தது. ஆனால், 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் நடந்த ஒரு போட்டியில், ரோஜர் பேனிஸ்டர் என்ற ரன்னர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் மூன்று நிமிடங்கள் மற்றும் ஐம்பத்து ஒன்பது புள்ளி நான்கு விநாடிகளில் ஓடி அதை முறியடித்தார்.

அடுத்த இரண்டு மாத காலத்துக் குள்ளேயே மற்றொரு ஆஸ்திரேலிய ரன்னரான ஜான் லேண்டியும் அதே சாதனையைப் படைத்தார். அதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான ரன்னர்களால் அந்த நான்கு நிமிட தடை பலமுறை உடைத்தெறியப்பட்டது. ரன்னர்களின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமே இந்த சாதனைகளுக்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. முந்தைய சாதனையாளர்களின் மனப் போக்கு மற்றும் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதன் விளைவே இந்த தொடர் வெற்றிகள்.

உறவுமுறையில் அணுகுமுறை!

பெரும்பாலும் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்தே நமது பல்வேறு செயல்பாடு களை மேற்கொள்கிறோம். மற்றவர் களுடனான நமது அணுகுமுறைகள் நமது வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்கிறார் ஆசிரியர். ஒரு சிலரிடம் நம்மால் இணைந்து செயல்பட முடியாது. அதேபோல, ஒரு சிலர் இல்லாமல் நமது சில செயல்பாடுகளை மேற்கொள்ளவும் முடியாது. வெவ்வேறு செயல்களில் நம்மால் சம்பாதிக்கப்பட்ட செல்வம் எண்பத்தி ஏழரை சதவீதம் மற்றவர்களை கையாளும் நமது திறனாலும், பன்னிரண்டரை சதவீதம் மட்டுமே நமது அறிவாற்றலாலும் தீர் மானிக்கப்படுகிறது என்கிறது ஸ்டான் ஃபோர்ட் ஆராய்ச்சி நிறுவனம். ஆக மற்றவர்களுடன் சரியான உறவுமுறை களை உருவாக்கிக்கொள்வது அவசிய மான விஷயமாகிறது. இது முழுக்க முழுக்க நமது அணுகுமுறைகளைப் பொருத்தே சாத்தியமாகின்றது.

ஆரம்பகால அணுகுமுறை!

ஒரு செயலின் தொடக்கநிலை அணுகுமுறைகள் அச்செயலின் இறுதி வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக சொல்கிறார் ஆசிரியர். உதாரணமாக, ஒரு பலமான அணியை எதிர்கொள்வதற்கு முன் தனது அணி வீரர்களின் சரியான அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை ஒரு பயிற்சியாளர் உணர்ந்திருப்பது. ஒரு அறுவைசிகிச்சை நிபுணர், தனது நோயாளி அவருக்கான அறுவைசிகிச் சைக்காக மனதளவில் தயாராகிவிட் டாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள் வது. ஒரு நிறுவனப் பணிக்காக விண்ணப்பிக்கும்போதே, அந்நிறு வனத்தின் எதிர்பார்ப்புகளை அறிந்துக் கொள்வது. ஒரு மேடைப் பேச்சாளர் தனது உரைக்கு முன், உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்வது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை உணர்ந்து செயல்படுவது வெற்றிக்கு அவசியம் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

அணுகுமுறை உருவாக்கம்!

நமது எண்ணங்களின் பழக்கங்களே அணுகுமுறைகளாக உருவெடுக்கின் றன. நல்ல எண்ணங்களின் வாயி லாக சிறந்த பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது வெற்றிக்கு பலனளிக்கும் செயல். அதற்கான வழிமுறைகள் ஆசிரியரால் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் நம்மிடமுள்ள மோசமான பழக்கங்களை பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, அதற்கான உண்மை யான மற்றும் ஆதரவான காரணங் களை அறிந்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக ஒரு நேர்மறையான பழக்கத்தை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அடுத்து, அந்த நல்ல பழக் கத்தையும் அதன் நன்மைகளையும் சிந்தனையில் வைக்கவேண்டும். அடுத்ததாக, அதன் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண் டும். அதன் வலுவூட்டலுக்கான தினசரி செயல்பாடுகள் அவசியம். புதிய பழக் கத்தின் வாயிலாக ஏற்பட்ட பலனுக்காக நமக்கு நாமே பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ளலாம்.

ஏற்கனவே நம்மிடமுள்ள ஒரு பழக்கத்தை விட்டொழிப்பதானாலும் அல்லது புதிதாக ஒரு பழக்கத்தை எற்றுக்கொள்வதானாலும், முதல் சில நாட்களுக்கு அது கொஞ்சம் கடினமே. இதற்காக மன ரீதியிலான தொடர்ச்சியான செயல்பாடுகளை மேற் கொள்வது அவசியம். இந்த செயல் முறைகளின் நடுவில் எவ்விதத்திலும் நம்மால் விடப்பட்ட பழைய மோச மான பழக்கங்கள் மீண்டும் நம்மிடம் தொற்றிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. இந்த வழிமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது அதிகப்படியான நல்ல பழக்கங்கள் நம்மிடம் வந்துசேரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சன் அவர்களின் கூற்றுப்படி, தனது இலக்கினை அடைவதற்கான சரியான அணுகுமுறைகளைக் கொண்ட ஒருவனை எதுவும் தடுத்து நிறுத்திவிட முடியாது; அதேசமயம், தவறான அணுகுமுறைகளைக் கொண்ட ஒருவனுக்கு இந்த பூமியில் எதுவும் உதவவும் முடியாது.

தொடர்புக்கு:p.krishnakumar@jsb.ac.in

பெரும்பாலும் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்தே நமது பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கிறோம். மற்றவர்களுடனான நமது அணுகுமுறைகள் நமது வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in