Last Updated : 25 Apr, 2017 10:15 AM

 

Published : 25 Apr 2017 10:15 AM
Last Updated : 25 Apr 2017 10:15 AM

ஹெச் 1 பி விசா விதிமுறைகளில் மீறல்: டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃஃபோசிஸ் நிறுவனங்கள் விசா விதிமீறல்களில் ஈடுபடு வதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது. ஹெச் 1 பி விசா குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கு அதிக விண்ணப்பங்களை அளித்து இந்த நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன. உயர் தகுதி அடிப்படையிலான குடியேற்ற விதிமுறைகளுக்கு ஏற்ப தற்போது இந்த விசா நடைமுறையை மாற்றியமைக்க ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதிக அளவில் பணியாளர்களை எடுக்கும் சில நிறுவனங்கள் ஹெச் 1 பி விசா நடைமுறையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக குலுக்கல் முறையிலான விசா வில் அதிக அளவில் தங்களது பணியாளர்களின் விண்ணப் பங்களை அளித்து, சாதாரண மாகவே அதிக வாய்ப்புகளை பெற்றுள்ளன என்று கூறி யுள்ளது.

அதிகமான ஹெச்1 பி விசா பெற்றவர்கள் என்று முன் னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், காக்னிஸன்ட் நிறுவனங்களை குற்றம் சாட்டி யுள்ளதுடன், குலுக்கல் முறையி லான விசா முறையில் இவர்கள் அதிகமான விண்ணப்பங்களை அளித்து, அதிக பணியாளர் களுக்கு விசா பெற்றுள்ளனர் என்று மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வெள்ளை மாளிகை இணையதளத்தில் இது தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

டாடா கன்சல்டன்சி, இன்ஃபோசிஸ், காக்னிஸன்ட் என மூன்று முக்கிய நிறுவனங்களை மட்டும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டு பேசியுள்ளது. இந்த நிறுவனங்கள்தான் அதிக ஹெச் 1 பி விசா பெற்றுள்ளன. இந்த மூன்று நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களும் ஹெச் 1 பி விசா வுக்கான ஊதியமாக ஆண்டுக்கு 60,000 டாலர் முதல் 65,000 டாலர் வரை மட்டுமே அளித்துள்ளன. ஆனால் சிலிகான் வேலி சாப்ட்வேர் பணியாளர்களின் சராசரி ஊதியம் 1,50,000 டாலர்கள் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

நிறுவனங்கள் மறுப்பு

இந்த நிறுவனங்கள் அதிக திறன் பணியாளர்களை கொண்டு வரவில்லை. பல நேரங்களில் அடிப்படை திறன் கொண்ட பணியாளர்களை கொண்டு வந்துள்ளன. குலுக்கல் முறை யிலான விசாவில் இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளை மாளிகையின் இந்த குற்றச்சாட்டை மூன்று நிறுவனங்களும் மறுத்துள்ளன.

ஊதியம் குறைவு

ஹெச் 1 பி விசாவுக்கு இப்போதுவரை தோராயமாக குலுக்கல் முறைதான் நடை முறையில் உள்ளது. தவிர ஹெச் 1 பிசா விசாவில் 80 சதவீத பணி யாளர்களுக்கு சந்தையில் நிலவும் சராசரி சம்பளத்தை விட குறைவாகத்தான் வழங்கப் படுகின்றன என்று அதிகாரிகள் கூறினர். இது ஆண்டுக்காண்டு வேறுபடும். இந்த விசாவில் அதிக சம்பளம் பெறுபவர்கள் 5 அல்லது 6 சதவீதம் நபர்களே. இதில் நான்கு விதமான சம்பளங்கள் நிலவுகின்றன என்று இந்த விசா வைத்திருப்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x