இவரை தெரியுமா?- டக்ளஸ் மேக்மில்லன்

இவரை தெரியுமா?- டக்ளஸ் மேக்மில்லன்
Updated on
1 min read

உலகின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகள் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர்.

2005-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை சாம்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர்.

மாஸ்மார்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

வால்மார்ட் மெக்ஸிகோ பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

உலக பொருளாதார மையத்தால் வழங்கப்படுகின்ற `இளம் சர்வதேச தலைவர்’ விருதை வென்றவர்.

அமெரிக்காவில் உள்ள டல்சா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

அமெரிக்க - சீனா வர்த்தகக் குழுவின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in