அகதிகள் மறுவாழ்வுக்காக அமெரிக்க ஐடி நிறுவனங்கள் 65 கோடி டாலர் ஒதுக்கீடு: அதிபர் பராக் ஒபாமா தகவல்

அகதிகள் மறுவாழ்வுக்காக அமெரிக்க ஐடி நிறுவனங்கள் 65 கோடி டாலர் ஒதுக்கீடு: அதிபர் பராக் ஒபாமா தகவல்
Updated on
2 min read

அமெரிக்காவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 நாடுகளில் உள்ள அகதிகளின் மறுவாழ்வுக்கு 65 கோடி டாலர் தொகையை செலவிட முன்வந்துள்ளன.

மைக்ரோசாப்ட், கூகுள், டிரிப் அட் வைஸர், ஹியூலட் பக்கார்டு (ஹெச்பி) உள்ளிட்ட நிறுவனங்கள் 63 லட்சம் அகதிகளுக்காகவும் அவர்களின் குழந்தைகளின் நலனுக்காவும் இத்தொகையை செலவிட உள்ளன. அகதிகள் முகாம்களில் உள்ள 80 ஆயிரம் குழந்தைகளின் கல்விக்கு இத்தொகை பயன் படுத்தப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் தொடர்பாக நடத்திய மாநாட்டில் பேசியபோது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

அசெஞ்சர், வெஸ்டர்ன் யூனியன், லிங்டுஇன் உள்ளிட்ட நிறுவனங்கள் அகதிகளின் குழந்தை களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை அளிக்கின்றன. இந்த நடவடிக்கை மூலம் 2.20 லட்சம் அகதிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிறுவனங்கள் அகதிகள் மேம்பாடு, அவர்களது குழந்தை களின் கல்விப் பணிகளுக்காக இத்தகைய முதலீடுகளை செய்துள் ளன. சில நிறுவனங்கள் இந்த தொகையை நன்கொடையாகவும், சில நிறுவனங்கள் இதற்கென நிதி திரட்டியும் அளித்துள்ளன. இத்தொகை முழுவதும் 20 நாடுகளில் உள்ள 63 லட்சம் அகதி கள் மற்றும் அவர்களின் குழந்தை கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப் படுகிறது. வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக இத்தொகை செலவிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி 2015-ம் ஆண்டில் உலகம் முழுவதும் கட்டாயமாக அல்லது பல்வேறு பிரச்சினைகளால் 6.53 கோடி மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளது கடந்த ஆண்டில்தான் என்று ஒபாமா சுட்டிக் காட்டினார்.

வெள்ளை மாளிகை கடந்த ஜூன் மாதம் அகதிகள் முன்னேற் றத்துக்காக தனியார் நிறுவனங்கள் உதவலாம் என்று அறிவித்தது. இதன்படி 15 நிறுவனங்கள் உதவ முன்வந்தன. இவ்விதம் உதவ முன்வந்த நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 51 ஆக உயர்ந்துள்ளது என்றார் ஒபாமா.

நடிகர் ஜார்ஜ் க்ளூனி மற்றும் அவரது மனைவி ஏற்படுத்தியுள்ள க்ளூனி அறக்கட்டளைக்கு 10 லட்சம் டாலர் வழங்குவதாக கூகுள் அறிவித்தது. லெபனானில் உள்ள சிரியா அகதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் மேம் பாட்டுக்கு இத்தொகை அளிப்ப தாக அறிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளூர் நிறுவனங் களுடன் இணைந்து வயர்லஸ் பிராண்ட்பேண்ட் சேவையை அகதி களுக்கும் மலாவியில் உள்ள சர்வ தேச உதவிக்குழுக்களுக்கும் தர திட்டமிட்டுள்ளது.

கிரீஸில் 35 இடங்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்தித் தருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. லெபனான் மற்றும் ஜோர்டானிலிருந்து இங்கு வரும் அகதிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதாக ஹெச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிங்டுஇன் நிறுவனம் அகதி களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் 50 ஆயிரம் டாலர் தொகையை தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கார் ஓட்டத் தெரிந்த அகதி களுக்கு வேலை அளிக்க உபெர் நிறுவனம் முன்வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in